இதை கொடுத்தால் நடிக்கிறேன்.. இல்லனா முடியாது.. முரண்டு பிடித்த நடிகை குஷ்பூ..!

80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ .

அப்போதே கொழுக் மொழுக் தோற்றத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசீகரித்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை குஷ்பு:

குறிப்பாக இவர் திரைப்பட நடிகை எனபதையும் தாண்டி தயாரிப்பாளர், அரசியல்வாதி, நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர், இப்படி பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

தமிழ் நன்றாக பேசத் தெரிந்த தமிழ் பெண் போல் பார்க்கப்பட்டு வரும் நடிகை குஷ்பு உண்மையிலே தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை.

ஆம் மகாராஷ்டிரா மாநிலம் பம்பாயில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் நடிகை குஷ்பு .

குழந்தையாக இருந்தபோதே தனது நடிப்பு வாழ்க்கை துவங்கி விட்டார். திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே வந்ததால் சென்னையிலே குடியேறி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் .

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வரும் நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நட்சத்திர நடிகை என அந்த காலகட்டத்திலேயே பார்க்கப்பட்டார்.

முதன் முதலில் 80க்களில் ஹிந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக குஷ்பு:

அதன் பிறகு துணைவே வேடத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை குஷ்பூ. ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கும் வந்து நடிக்க ஆரம்பித்தார்.

1981 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலமாக குஷ்பூ ஹீரோயின் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

முதல் திரைப்படமே அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றுத் தந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து கன்னடம் மற்றும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைக்க தவறவிடாமல் நடித்து தென்னிந்த சினிமாவின் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ரிக்ஷா மாமா, சின்ன தம்பி ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ,நாட்டாமை ,தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, கிழக்குக்கரை , மன்னன் , பாண்டியதுரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர் வற்றி படங்கள்:

சிங்காரவேலன், சின்ன வாத்தியார் , என் பொண்டாட்டி நல்லவ, சிம்ம ராசி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை குஷ்பு .

இதனிடையே 90 காலகட்டம் முடியும் தருவாயில் 2000 கால கட்டங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் வந்தார் .

அதன் மூலம் அவர் மின்சார கண்ணா, வில்லு, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்த வந்தார்.

குஷ்புக் சினிமாவில் பீக்கில் இருந்த போது நடிகர் பிரபுவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் இருந்தார் .

ஆனால் சிவாஜி கணேசன் அவர்களுக்கு காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு 2000 ஆண்டில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் .நடிகை குஷ்பு திருமணத்திற்கு பிறகு சொந்தமாக அக்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதனுடைய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலை சமீபத்தை பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் அறிமுகமானது பற்றி கூறியிருக்கிறார் நடிகை குஷ்பு .

இந்த பழைய பேட்டி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் நான் சினிமாவுக்கு வருவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை .

அதை கொடுத்தால் தான் நடிப்பேன்:

என்னுடைய அண்ணன் நடிகை ஹேமமாலினியின் உறவினர்களோடு நட்பில் இருந்தார். அதனால் அவர் அடிக்கடி ஹேமாலினி வீட்டுக்கு சென்று வருவான் .

அப்படித்தான் ஹேமமாலினி வீடு எப்படி இருக்கும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. ஒருமுறை நானும் என் அண்ணனுடன் ஹேமமாலினி என் வீட்டுக்கு சென்றோம்.

அப்போது ரவி சோப்ரா என்னை பார்த்தார். அவர் பார்த்த உடனே. ஃபர்னிங் டிரெயின் என்ற படத்தி 8 வயது குழந்தை கேரக்டரில் என்னை நடிக்க வைக்க கேட்டார்.

என் அம்மாவும் அதற்கு ஓகே சொல்ல தான் நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானேன். அந்த நேரத்தில் ரவி சோப்ராவுடன் நான் தினமும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தால் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டேன்.

சிறுவயதில் ஐஸ்கிரீம் என்றால் அந்த அளவுக்கு உயிராக இருந்தேன். நான் வைத்த கண்டிஷனுக்கு ரவி சோப்ரா ஒப்புக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பாராம்.

அதேபோல பள்ளி நேரத்தில் நடிக்கவே வரமாட்டேன் என்றும் கண்டிஷன் போட்டு இருந்தேன். அதற்கும் ரவி சோப்ரா ஒப்புக் கொண்டிருக்கிறார் என நடிகை குஷ்பூ தன்னுடைய குழந்தைகால நடிப்பு குறித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version