நெடுங்காலமாக கூந்தல் பராமரிப்பு என்பது படு ஜோராக நடக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் இன்றைய தலைமுறை தலைமுடி பாதிப்பில் அதிக அளவு மன அழுத்தம் ஏற்படக்கூடிய அளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை கூறித்தான் ஆக வேண்டும். உணவு பழக்க வழக்கங்களால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்களின் காரணமாக இளம் வயதிலேயே இளநரை ஏற்பட்டு விடுவதால் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மன அளவில் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனை தடுக்க இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நமது தேசத்தை பராமரிப்பது தான் சிறந்த வழி என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவு இல்லாத நேர்மறையான முடிவுகளை நாம் பெற முடியும்.
இளநரையை போக்கும் உருளைக்கிழங்கு சாறு:
நமது கூந்தல் பராமரிப்பில் உருளைக்கிழங்கு சாரறுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது என்றால் அனைவரும் ஆச்சரியத்தோடு தான் அதை பார்ப்பார்கள். கூந்தல் பராமரிப்புக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாவு சத்தை இந்த உருளைக்கிழங்கு சாறு வழங்குகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
அதுமட்டுமல்லாமல் கூந்தல் சம்பந்தப்பட்ட அத்துணை பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராடக்கூடிய ஆற்றல் இந்த உருளைக்கிழங்கு சாருக்கு உள்ளது.
இந்த உருளைக்கிழங்கு சாறில் அதிக அளவு மாவுச்சத்து இருப்பதால் தலைமுடியில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கை வெளியேற்ற முடியும். மேலும் இதில் பிரீச்சிங் பண்புகள் அதிகமாக இருப்பதால் தலை முடியை சாயம் விடுவதற்கும் ஜொலிக்க செய்வதற்கும் ஏற்றது.
இந்த உருளைக்கிழங்கு சாறு தலைமுடியில் இருக்கும் வேர் கால்களை வலுப்படுத்துவதால் எளிதில் முடி உதிர்தல் ஏற்படாது. மேலும் இது பிஹெச் அளவை மேம்படுத்தி சரி விகிதத்தில் பராமரிக்க உதவ உதவுகிறது.
மேலும் பொடுகு பூஞ்சைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இந்த சாறு தடை செய்யும். வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும் இந்த உருளைக்கிழங்கு சாறை அடிக்கடி நீங்கள் உங்கள் தலையில் தேய்த்து வேர்க்கால்கள் வரை செல்லும்படி லைட்டாக மசாஜ் செய்து வருவதால் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரித்து இளநரை வருவது தடுக்கப்படும்.
மேலும் கோலஜனை மீட்டு எடுக்கக்கூடிய வகையில் இது உள்ளதால் புதிய முடிகள் விரைவாக வளர பூரண உதவி செய்யும்.
உலர்ந்த கூந்தல் உள்ளவர்கள் 50 மில்லி உருளைக்கிழங்கு சாறுடன் கற்றாழையையும் சேர்த்து நன்கு இணைந்து நிமிடம் கழித்து குளித்தால் உங்கள் வறண்ட முடி மாறிவிடும். இந்த உருளைக்கிழங்கு சாறினை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் இளநரை கருப்பாக உதவி செய்யும்.
வாரத்தில் மூன்று நாட்கள் இதை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்த ரிசல்ட் தருவதற்கு உதவி செய்யும்.