சார் கூலி திரைப்பட காப்பிரைட்..? இளையராஜாவிடம் கேட்ட கேள்வி.. ஒரே ஒரு Reaction.. அம்புட்டுதான்..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு எவ்வளவு புகழ் செல்வாக்கு கிடைக்கிறதோ அதேபோல் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் புகழும், செல்வாக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவே செய்கிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சினிமாத் திரையில் தெரிபவர்கள் மட்டுமே சினிமா துறையில் புகழ்பெற்றவர்கள் என்ற நிலை மாறி இப்போது சினிமாவில் பின்னணியில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும் ரசிகர்களின் கவனத்தில் இருக்கின்றனர்.

அந்த வகையில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஏனெனில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி ஒரு படம் குறித்த பல்வேறு விஷயங்களையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதால், எல்லோருக்குமே சகல விஷயங்களும் தெரிகிறது.

இளையராஜா

அந்த வகையில் இளையராஜா இசை உலகில் சக்கரவர்த்தியாக கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்.

இளையராஜாவை பொருத்தவரை இசையில் அவர் ஒரு ஞானியாக தான் எல்லோராலும் மதிக்கப்படுகிறார், பாராட்டப்படுகிறார், போற்றப்படுகிறார். ஆனால் அதே நேரத்தில் தனிமனிதராக அவரது செயல்பாடுகள், அவருடைய கர்வம்ல தலைக்கணம், அவர் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் அவர் மீதான அதிருப்தியான ஒரு மனநிலையே உருவாக்கி வருகிறது.

பாடல் எனக்கு தான் சொந்தம்

குறிப்பாக சமீப காலமாக, அவர் நான் இசையமைத்த பாடல்களை எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் இசையமைத்த பாடல்கள் எல்லாம் எனக்கே சொந்தம் என்று கூறுகிறார். ஆனால் ஒரு கவிஞர், பாடல் ஆசிரியர் பாடல் வரிகளை எழுதுகிறார். ஒரு பாடகர் சிறந்த தன் இனிமையான குரலில் அழகாக பாடுகிறார். அதற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இவர் இசையமைத்தாலும் அந்த இசைக்கருவிகளை வாசிப்பது இசைக் கலைஞர்கள் தான்.

அந்த வகையில் பலரது கூட்டு முயற்சியில்தான் ஒரு பாட்டு உருவாகிறது. அது மட்டும் இன்றி பாடகருக்கும், இசையமைப்பாளருக்கும், பாட்டை எழுதிய கவிஞருக்கும் தயாரிப்பாளர் மொத்தமாக சம்பளம் கொடுத்துதான் அந்தப் பாட்டை விலைக்கு வாங்கி தனது படத்துக்காக பயன்படுத்துகிறார்.

விற்று விடுகிறார்கள்

ஆக சம்பளம் பெற்றுக் கொண்டு, பிறகு அந்தப் பாட்டை ஒரு தயாரிப்பாளருக்கு விற்று விடுகிறார்கள் என்பதே உண்மை.

இந்த சூழ்நிலையில், நான் இசையமைத்த பாட்டு எனக்கு மட்டுமே சொந்தம் என்று இளையராஜா உரிமை கொண்டாடுவது, எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது என்பது சமூக பார்வையாளர்கள், சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

கூலி படம்

இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள கூலி படத்தின் டீசர் வெளியானது. இதில் தங்க மகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடலில், டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ என்ற பிஜிஎம் இந்த டீசலில் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

எனது அனுமதி இல்லாமல், நான் இசையமைத்த அந்த பிஜிஎம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று இதற்கு விளக்கம் கேட்டு, இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில்…

இந்த சூழ்நிலையில் இப்போது மும்பையில் இருந்து, சென்னை திரும்பி இருக்கிறார் இசைஞானி இளையராஜா. அப்போது சென்னை விமான நிலையத்தில் கோட் சூட் சகிதமாக வந்த அவரை, செய்தியாளர்கள் சந்தித்து சார் கூலி படம் காப்புரிமை குறித்து கேள்வி எழுப்பினர்.

அவர்களை அப்படியே பார்த்தபடி, எந்தவித பதிலும் சொல்லாமல் நடந்து சென்று காரில் ஏறி கொள்கிறார் இளையராஜா. பிறகு அங்கிருந்தவர்களை பார்த்துவிட்டு, கையை அசைத்து வேண்டாம் என்று சைகை காட்டி மறுத்துவிட்டு காரில் ஜன்னல் கருப்பு கண்ணாடிகளையும் ஏற்றிக்கொண்டு சென்று விடுகிறார்.

முகத்தில் காட்டிய ரியாக்சன்

இப்படி எந்த பதிலுமே சொல்லாமல் முகத்தில் மட்டுமே ஒரு ரியாக்ஷனை காட்டிவிட்டு இளையராஜா சென்றிருப்பது, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சார் கூலி திரைப்பட காப்பிரைட்..? இளையராஜாவிடம் கேட்ட கேள்வி.. ஒரே ஒரு Reaction.. அம்புட்டுதானா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version