இசைஞானி இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதா? என்ன இதை வழங்குபவர் நம் பாரத பிரதமர் மோடியா?

 இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களின் வரிசையில் வருபவர் இளையராஜா சுமார் 1000 படங்களுக்கு மேல் சாதனை படைத்திருக்கக்கூடிய இவரின் இசைப்பயணம் மிகவும் சுவாரஸ்யமானது.

 மேலும் இவர் பத்மபூஷன் உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் சமீபத்தில் தான் இவர் ராஜ்ஜிய சபா எம்பியாக பொறுப்பேற்றுக் கொண்டது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

 இளையராஜாவின் இசையை கேட்காத தமிழக மக்கள் ஏன் உலக மக்களை யாரும் இல்லை என்று கூறலாம். தாய் இல்லாத பிள்ளைகளை இவரது பாடல்கள் தான் உறங்க வைத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாக இருக்காது.

இளையராஜா இசைக்காக ஆற்றிய எண்ணற்ற பணிகளை யாரும் மறக்க முடியாது இவரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு வளர்ந்த தலைமுறைதான் நம் தலைமுறை என்பதை என்றுமே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மேலும் எண்ணற்ற சாதனைகளை புரிந்து இருக்கக்கூடிய இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த கௌரவ டாக்டர் பட்டமானது திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் கிடைக்க உள்ளது.

இந்த விழாவில் சுமார் 2200 பேருக்கு மேல் இதில் பட்டம் வாங்க போகிறார்கள். இதில் நமது பாரதப் பிரதமர், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ள இந்த விழாவில் தான் நம் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

 இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கௌரவ டாக்டர் பட்டம் பெறக்கூடிய இளையராஜா இன்று போல் என்றும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து திரைத்துறை வட்டாரங்களை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்கள் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …