முன்னணி நடிகர் தவற விட்ட வாய்ப்பு.. விடாமல் பிடித்துக்கொண்டு Cult Hit கொடுத்த சிம்பு..

தமிழ் திரை உலகில் அடுக்கு தொடரில் பிச்சு உதறும் நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமையை கொண்ட டி ஆர் ராஜேந்திரனின் மகன் சிம்பு என்கிற சிலம்பரசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.

இவரும் தனது தந்தையைப் போல பன்முகத் திறமையை கொண்ட நடிகராக வளர்க்கப்பட்டதால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

நடிகர் சிம்பு..

தமிழர்களின் நெஞ்சில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிம்பு எப்போதும் நம்ம வீட்டுப் பிள்ளையாக இருப்பவர். ஏனென்றால் குழந்தை பருவம் முதற்கொண்டு திரையில் நடித்து இல்லத்தரசிகளின் அன்பை எளிதில் பெற்றவர்.

வளர்ந்த பிறகும் பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், இவரது தீய செய்கையின் காரணத்தால் திரைப்பட வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். ஒரு காலகட்டத்தில் இனி சிலம்பரசனால் எழுந்து வர முடியாது என்று திரை உலகமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தனது செகண்ட் இன்னிங்ஸ் சிறப்பாக செய்து முடித்தார்.

இதனை அடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் விஸ்வரூப வெற்றியை தந்த இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

அவர் தவறவிட்ட வாய்ப்பு..

இந்நிலையில் இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் நடிகை திரிஷாவோடு இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார். மேலும் இவர்கள் நடிப்பில் வெளி வந்த இந்த திரைப்படமானது ஒரு மாபெரும் வெற்றியை தந்தது.

வசூல் ரீதியிலும் சரி, விமர்சன ரீதியிலும் சிம்புவுக்கு நல்ல பெயரை இந்த படம் மற்ற படங்களை விட மிகச் சிறப்பான முறையில் பெற்று தந்தது. ஆனால் ஆரம்பத்தில் இந்த படத்தில் இவர் நடிப்பதாக இல்லை. இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முதலில் யாரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் என தெரியுமா?

விடாமல் பிடித்து Cult hit..

இயக்குனர் கௌதம் மேனன் கூறும் போது இந்த படத்தில் வரக்கூடிய கதாநாயகன் பார்க்க அதற்கு பக்கத்து வீட்டு பையனை போல இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் முதலில் நடிகர் தனுஷை தான் நடிக்க கமிட் செய்து வைத்திருந்தோம். அதற்கு தனுஷும் ஓகே சொல்லிவிட்ட நிலையில் சூழ்நிலை காரணமாக தனுஷால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

இதனை அடுத்து தான் நடிகர் சிம்புவை கமிட் செய்தோம் என்ற தகவலை அண்மை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தவற விட்ட தனுஷ் அதே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நடிகர் சிம்புவின் ரசிகர்கள் பட்டாளம் இந்த படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் மாபெரும் வெற்றி அடைந்த விஷயத்தை பேசி வருவதோடு முன்னணி நடிகர் தவற விட்ட வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டு Cult hit கொடுத்த லிட்டில் ஸ்டார் சிம்பு என பேசி வருகிறார்கள்.

தற்போது நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 படத்தில் நடிக்க உள்ளார். வரலாற்று கதை அம்சத்தில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருவதால் இந்த படத்தை காணக்கூடிய ஆவலில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version