இமான் மனைவி என்னை இப்படித்தான் கூப்டுவாங்க.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் சிவகார்த்திகேயன் பேச்சு..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப நாட்களில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா என்ற திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன்..

தனது முதல் படத்திலேயே அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2012ல் 3, மனம் கொத்திப் பறவை போன்ற படங்களில் நடித்ததை அடுத்து 2013-இல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதை அடுத்து 14-ஆம் ஆண்டு மான் கராத்தே படத்தில் நடித்த இவர் அண்மையில் வெளி வந்த அயலான் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட்டார்.

இசையமைப்பாளர் இமான்..

இந்நிலையில் சிவ கார்த்திகேயன் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்த இசையமைப்பாளர் இமான் பல்வேறு சர்ச்சைகளை கிளப்ப கூடிய வகையில் சிவகார்த்திகேயனை பற்றி பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய இசையமைப்பாளர் இமானின் பேச்சுக்கு இது வரை எந்த பதிலையும் அளித்திறாத நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரைப்படங்களில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையே ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலைகள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பிரச்சனையில் தற்போது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றக்கூடிய விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயனின் வைரல் பேச்சு..

இந்த பழைய வீடியோவில் சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த விஷயத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இவர்கள் இடையே தொழில் முறையைத் தாண்டி ஒரு உறவு முறை இருந்தது என்று கூறக்கூடிய வகையில் இவரது பேச்சை இருந்தது.

மேலும் சிவக்கார்த்திகேயன் பேசும் போது இவர்கள் இரு குடும்பமும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், இமானின் மகன் சிவகார்த்திகேயனை சித்தப்பா என்று தான் அழைப்பதாக அவர்கள் இடையே நெருக்கம் பற்றி கூறுகிறார்.

மேலும் இமானின் மனைவி என்னை கொழுந்தன் என்று தான் கூப்பிடுவார், நானும் அண்ணி.. அண்ணி.. என்று அன்போடு கூப்பிடுவேன் என்று இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சித்தப்பா என்று அழகா சொன்னது யார் என்ற கேள்விகளை கிண்டலாக எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ சிவகார்த்திகேயன் உடைய பழைய வீடியோ என்றாலும் திடீரென்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://www.facebook.com/share/r/DeLgmf4BqCoi2vZN/?mibextid=saVFRo சென்று பார்க்கலாம். அப்படி பார்க்கும் போது அவர்களிடையே இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை உங்களுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கும். அந்த அளவுக்கு உறவு முறையை நாசுக்காகவும் அழகாகவும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version