ஆஸ்துமாவை குணமாக்கும் மூலிகை இம்பூரல்.

மழைக் காலத்தில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அதிக அளவு காணப்படக்கூடிய மூலிகைச் செடி தான்  இம்பூரல். இதனை தமிழில் சாயத் செடி, சாயவேர் செடி என அழைக்கிறோம். பொதுவாக  இம்பூரல் வறண்ட இடத்திலும் வளரக்கூடிய தன்மை கொண்டது. 

இம்பூரலின் அறிவியல் பெயர்:

இதனுடைய தாவரவியல் பெயர் ஒல்டன்லோண்டியா அம்பளேடா. இது ருபியேசி எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. 

இந்த இம்பூரல் செடி பார்ப்பதற்கு மிகவும் சிறிதாகவே இருக்கும் . “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்று கூறும் உவமைக்கு ஏற்ப 

பிறப்பிடம் மற்றும் பெயர் காரணம்:

இம்பூரலின் பிறப்பிடம் இந்தியா. சிவப்பு நிறச் சாயம் இதன் வேரிலிருந்து எடுக்கப்பட்டதால் சாயவேர் என்ற பெயரை இந்தச்செடி பெற்றது.

ஆஸ்துமாவை போக்க இம்பூரலை இப்படி பயன்படுத்தி பார்க்க:

இன்று என்ன காரணத்தினால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்று தெரியாமலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் ஏற்படும்.  அதனை சரி செய்வதில் இம்பூரல்  முக்கிய பணி செய்கிறது.

சளி, இருமல்,காய்ச்சல் ரத்தவாந்திக்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த மூலிகை பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிராங்கியல் ஆஸ்துமாவுக்கு இது ஒரு நல்ல மருந்து. 

ஆஸ்துமா நோயாளிகள் இந்த தாவரத்தின் இலைகளை கசாயம் வைத்து 10 : 4 என்ற விகிதத்தில் காய்ச்சி கசாயம் வைத்து குடிப்பதின் மூலம் ஆஸ்துமா நோய் முற்றிலும் குணமாகும்.

இதன் வேரை பொடியாக்கி தேன் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் ஆஸ்துமா நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இம்பூரலின் வேறு பயன்கள்:

T B என்று சொல்லக்கூடிய காச நோயை முற்றிலும் குணப்படுத்த கூடிய தன்மை இந்த மூலிகைச் சாறுக்கு உண்டு. 

காய்ச்சலை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை பெரும்பங்கு வகிக்கிறது. 

இதன் இளம் இலைகளை அரைத்து கொப்புளங்கள் மேல் பூசி வந்தால் கொப்புளங்கள் குணமாகும்.

விஷக்கடிகளுக்கு மிகச் சிறந்த மூலிகையாகவும் இந்த இம்பூரல் பயன்படுகிறது. தேள் கடித்த இடத்தில் இதன் இலையை அரைத்து பூசுவதால் அதன் வலியிலிருந்து விடுபடலாம். அதுமட்டுமல்லாமல் விஷம் உடலில் பரவாமல் அதனை தடுக்க கூடிய தன்மை இந்த மூலிகைக்கு உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …