இன்பநிதி தோழியுடன் இருக்கும் காட்சியை லீக் செய்தது இவர் தான்..! – பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

இன்பநிதி : ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் சினிமா தயாரிப்பாளராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

அதன்பிறகு திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன. குறிப்பாக நடிகர் சந்தானத்துடன் சேர்ந்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இவருடைய முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை.

சமீபத்தில் மனிதன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படத்திலும் பார்வையற்றவராக நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய நடிப்பு பயணத்தை முடித்துக் கொண்டு முழுநேரமாக அரசியலில் இறங்க திட்டமிட்டு இருக்கிறார். இனி நடிப்பைத் தொடரப் போவதில்லை முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருக்கிறேன் என்று கூறியிருந்தார் உதயநிதி.

இவருடைய மகன் இன்பன் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்புதான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற ஒரு கால்பந்து அணியின் வீரராக தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் இன்பன் தேர்வாகி இருந்தார்.

இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில். இன்பன் தன்னுடைய தோழி என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில நேற்று மதியம் முதல் இணையத்தில் வைரலாக தொடங்கியது.

இந்த புகைப்படங்கள் வெளியாகி இன்பன் மற்றும் திமுக கட்சி சார்ந்த சர்ச்சைகளை கிளப்பி விட்டு இருக்கின்றது. இந்நிலையில், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய பிரபல நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது தற்பொழுது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கட்சியைவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்தி இருக்கிறது.

இப்படிப்பட்ட அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்..? அடல்ட் வீடியோ ஆடியோ ஃபோட்டோ புகழ் அண்ணாமலை என்று ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.

இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கின்றது. மேலும் ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. அரசியல் ரீதியாக ஒருவரை தாக்க கற்றுக்கொள்ளவேண்டும் அண்ணாமலை என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை தாக்கும் விதமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam