இன்பநிதி-யின் புதிய காட்சிகள் வைரல்..? – அடங்காமல் தொடரும் சர்ச்சை..! – வைரலாகும் வீடியோ..! – உண்மை என்ன..?

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் நடிகரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதியின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

இதனைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இந்த வீடியோவை வெளியிட்டது இவர்தான் என்று ஒரு சர்ச்சை…..! இந்த வீடியோவில் இருப்பது இன்பம் நிதியே கிடையாதுப்பா.. யாரோ எடிட் செய்து பரப்பி விட்டார்கள் என்று உடன்பிறப்புகளின் குற்றச்சாட்டு…!

காதலிக்கவோ அதனை வெளிப்படுத்தவோ.. பயப்பட தேவையில்லை.. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று.. என்ற இன்பன் உதயநிதியின் தாய் கிருத்திகா உதயநிதி செய்த பதிவு..

இந்த புகைப்படங்களை முதன்முதலில் இணையத்தில் வெளியிட்டது இவர்தான் என்று பரவிய சில ஆதாரங்கள் என கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரத்தை சுற்றியே சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகளை நம்மால் பார்க்க முடிகின்றது.

இப்படி இருக்கும் நிலையில் புதிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் வருவது போல மரத்துக்கடியில் காதலியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் இன்பன் நிதி என்ற தலைப்பில் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான புகைப்படங்கள் தெளிவாக இருந்தன. அது இன்பன் நிதிதான் என்பதை உறுதியாக காட்டியது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள வீடியோவில் இருப்பது இன்பன் உதயநிதி தானா..? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

காரணம், இந்த வீடியோ மிகவும் தரம் குறைந்ததாக இருக்கிறது. புகைப்படங்கள் தெளிவாக இருக்கும்போது இது இன்பன் கிடையாது என்று போட்டோஷாப் செய்திருக்கிறார்கள் எடிட் செய்திருக்கிறார்கள் என்று பலரும் கூறிய நிலையில், இந்த வீடியோ காட்சியில் இருப்பது என்பது இன்பன் உதயநிதி தான் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அதற்கேற்றார்போல தான் இந்த வீடியோவும் உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் நபர் இன்பன் உதயநிதி போலவே சிகை அலங்காரம்.. அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் போலவே ஒரு டீசர்ட் என அணிந்துள்ளார் தவிர இன்பன் உதயநிதி போலவே இருக்கும் வேறொரு நபராக இருக்குமோ..? என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

எனவே, உண்மை என்ன..? என்பதை நீங்களே இந்த வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam