“இன்பநிதி ரொமான்ஸ்..” – புகைப்படத்தை முதலில் வெளியிட்டது யார்..? – வெளியான ஆதாரம்..! – நெட்டிசன்கள் ஷாக்..!

இன்பநிதி : பிரபல நடிகரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி தனது தோழியுடன் இருக்கும் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சில கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த விவகாரத்தை வைத்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்கள் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

இன்பன் உதயநிதி-யின் இப்படியான லீலைகளை பார்த்த இணையவாசிகள் இந்த வயசுலயே இப்படியா..? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். பணம் இருப்பதால் இந்த அளவுக்கு இவர்களால் இருக்க முடிகிறது.

ஆனால் இவர்களுக்கு ஓட்டு போட்ட குடும்பத்தினரின் நிலையை யோசித்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது என்று கூறுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, என்ன இருந்தாலும் தனிப்பட்ட ஒரு நபரின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பது மிகவும் கீழ்த்தரமான செயல்.

அந்தந்த வயதில் அவரவர் செய்யக்கூடிய செயலைத்தான் இன்பன் உதயநிதியும் செய்திருக்கிறார். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. முழுக்க முழுக்க அது அவருடைய தனிப்பட்ட விஷயம்.

இதில் அரசியல் செய்ய ஒன்றுமே கிடையாது. இதில், அரசியல் பேசுவதால் தமிழக அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றால் அது மிகவும் தவறு. உதயநிதி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

அவருடைய வாழ்க்கைக்குள் புகுந்து.. அதுவும் அந்தப் பெண்ணுடன் இருக்கும் அந்த புகைப்படங்களை பகிர்வது மிகவும் தவறானது. பருவ வயதில் காதல் வருவது அனைவருக்கும் இயல்பானது. அது தான் இன்பன் உதயநிதிக்கும் வந்திருக்கிறது. இது ஒன்றும் யாரும் செய்யக்கூடாத காரியம் கிடையாது என்று தங்களுடைய பார்வையை தெரிவிக்கும் இணையவாசிகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்பன் உதயநிதியின் தாய் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில் “காதலிப்பதற்கோ.. காதலை வெளிப்படுத்துவதற்கோ தயங்கக்கூடாது.. இயற்கையின் மகிமையைப் புரிந்து கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று..” என்று ஒரு பதிவை வெளியிட்டு தன்னுடைய மகன் உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இவருடைய இந்த கருத்தும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை முதன்முதலில் இணையத்தில் வெளியிட்டது யார்..? என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வியன் தமிழ் என்ற ஒரு ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ட்விட்டர் பக்கத்தில் இயங்கும் நபர்கள் வியன் தமிழ் என்றுதனியாக யுடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

அதில் பாஜகவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த சேனல் இந்த இணைய முகவரியை தேடியபோது அது “ANKAL RESEARCH CONSULTANTS” என்ற நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒருவர் இந்த நிறுவனம் அண்ணாமலையின் கீழ் வருகிறது என்ற ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். வியன் தமிழ் என்ற ஒரு முகவரி இருக்கிறது. அது குறிப்பிட்ட நிறுவனத்தின் முகவரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் அது அண்ணாமலை தான் சொந்தம்.. அவர் தான் அதை நிர்வாகிக்கிறார் என்று எந்த வகையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், இது முழுக்க முழுக்க அண்ணாமலையின் கீழ் இருக்க கூடிய ஒரு நிறுவனம் என்று அந்த நபர் தன்னுடைய பதிவில் எழுதி இருக்கிறார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்பன் உதயநிதியின் இந்த புகைப்படங்களை வைத்து திமுகவுக்கு எதிரான ஒரு கருத்து பரவி வரும் நிலையில் இதே இன்பன் உதயநிதியின் புகைப்படத்தை வைத்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களும் உடன் பிறப்புகளால் வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த விவகாரம் இப்படியே தலையும் வாலும்.. தலையும் வாலுமாக.. நீண்டு கொண்டே போகிறது. இது எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் சாதாரண இணைய வாசிகள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version