தனுஷ் இப்படி சொல்லுவாருன்னு எதிர்பார்க்கல.. நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஓப்பன் டாக்..!

திரையில் ஒரு திரைப்படம் முழுமையாக மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு இயக்குனர்களின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் அவர்களிடம் தனுஷ் சொன்ன விஷயம் தற்போது தீயாக பரவி வருகிறது.

இந்த விஷயத்தை நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், தனுஷ் இப்படி சொல்லுவார் என்று தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என அந்த விஷயத்தை ஓபன் ஆக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

நானே வருவேன்..

யாரும் எதிர்பார்க்காத மிரட்டலான ஹாரர் திரில்லர் படமாக வெளி வந்த நானே வருவேன் திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க இரட்டை கதாபாத்திரங்களை ஏற்று தனுஷ் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் மனைவியாக இந்துஜா, மனநல மருத்துவராக பிரபு, சூப்பர்வைசராக யோகி பாபு என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து கதையை சிறப்பான முறையில் கொண்டு செல்ல உதவி செய்திருந்தார்கள்.

மேலும் ஒவ்வொரு ஃபிரேமிலும் யுவன் சங்கர் ராஜாவின் கைவண்ணம் மிகச் சிறப்பான முறையில் இருந்தது என்று கூறலாம். ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்ற இந்த படமானது வசூலில் ஓரளவு வெற்றி பெற்றது.

கொட்டுப்பட்டாலும் மோதிர கையால் கொட்டு படு என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது போல இயக்குனர் இமயம் பாலச்சந்தர் கையால் கொட்டுப்பட்டவர்கள் ரஜினியும், கமலும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் பல முன்னணி இயக்குனர்கள் தங்கள் இயக்கக்கூடிய படங்களில் நடிகர் மற்றும் நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக சற்று கடினமாகவும் கோபமாகவும் நடந்து கொள்வார்கள்.

இந்துஜாவிடம் தனுஷ்..

இதற்கு உதாரணமாக பாரதிராஜா,, மணிரத்தினம் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்களை நாம் முன்னுதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கிய செல்வராகவனின் கண்டிப்பு தன்மையை பற்றி தற்போது அவரது தம்பியான தனுஷ் தன்னோடு இணைந்து நடித்த இந்துஜா ரவிச்சந்திரன் இடம் கூறி இருப்பது அவருடைய ஒரு மிகப்பெரிய ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இந்துஜா ரவிச்சந்திரன் இது பற்றி ஓப்பனாக கூறும்போது நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் தனுஷ் என்னிடம் வந்து நீ ரொம்ப கொடுத்து வைத்த பெண். செல்வராகவனிடம் நாங்கள் எந்த அளவுக்கு திட்டு வாங்கி இருக்கிறோம் என்று தெரியுமா? என்று பேசுகிறதாக கூறியிருக்கிறார்.

மேலும் தற்போது அவர் மிகவும் அமைதியாகிவிட்டார். கோபமாக பேசுவதை குறைத்து இருக்கிறார். அதனால் தான் உன்னை கொடுத்து வைத்த பெண் என்று கூறுகிறேன். நாங்கள் எல்லாம் அவரிடம் வேலை செய்யும் போது வாங்காத திட்டே கிடையாது அப்ப இருந்த செல்வராகவன் போல் இப்போது இல்லை.

இது மாதிரியே அப்பவும் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என தனுஷ் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு தன்னுடைய சொந்த அண்ணனை பற்றி இப்படி நடிகர் தனுஷ் இப்படி சொல்வார் என்று சற்றும் எதிர்பார்க்காத நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் படப்பிடிப்புத் தளத்தில் கண்டிப்புடன் தான் இயக்குனர்கள் நடந்து கொள்வார்கள் என கூறினார்.

மேலும் அப்படி நடந்து கொள்வதின் மூலம் தான் அவர்கள் விருப்பத்திற்கு தக்க படி காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என கூறி இருக்கக்கூடிய விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam