இந்தியன் 2 படத்தில் வருவது.. சேனாதிபதி இல்லையாம்.. சந்த்ருவாம்.. இதை கவனிச்சீங்களா..?

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதை அம்சத்தோடு வெளி வரும் படங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் வெளி வந்த திரைப்படமான இந்தியன் 1 திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

இதை அடுத்து இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டதை அடுத்து தற்போது இந்தியன் 2 பகுதி உருவாக்கி உள்ளது.

இந்தியன் 2 படத்தில் வருவது..

ஏற்கனவே முதல் பகுதியில் உலக நாயகன் கமலஹாசன், சுகன்யா போன்றவர்களின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருந்த ரசிகர்கள் இந்த இந்தியன் 2 பகுதியை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

அந்த வகையில் இந்த படத்தில் மீண்டும் உலக நாயகன் நடிக்க பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லி ராஜாவின் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

அது மட்டும் அல்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளி வரக்கூடிய இந்த படத்தில் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மேலும் சேனாதிபதியாக இந்த படத்தில் கமலஹாசன் நடித்திருக்கிறார் என்று கருதப்பட்ட வேளையில் இந்த படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் இளம் இசை அமைப்பாளர் அனிருத் அமைத்து இருக்கிறார்.

ஆர் ரத்தினவேலு ஒளி பதிவு செய்ய ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பினை செய்திருக்க இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது என்றால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு 2017-ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் முதல் நிகழ்வின் போது வெளி வந்ததை அடுத்து 2018-இல் கமலஹாசன் பிறந்த தினத்தில் இந்த திரைப்படம் குறித்து லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டது.

சேனாதிபதி இல்லையாம்..

மேலும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2018 துவங்கும் என்றும் 2019 ஆம் ஆண்டிலேயே படம் வெளி வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்தப் படம் ஷூட்டிங் நடந்த சமயத்தில் 2020-இல் விபத்து ஒன்று ஏற்பட்டு அதில் மூன்று நபர்கள் உயிரிழந்ததை நினைவில் இருக்கலாம்.

மேலும் அந்த விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கும் உயிரிழந்த குடும்பத்தாருக்கும் நிவாரணத் தொகையை திரைப்படத் தொழிலாளர் சங்கம் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் இந்த திரைப்படம் விரைவில் வெளி வர உள்ளது.

அத்தோடு இந்தப் படத்தில் இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக சேனாதிபதி வருகிறார். கணக்குப் படி அவருக்கு தற்போது வயது 120 தாண்டுகிறது.. இது என்ன கொடுமை..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சந்த்ருவாம் இதை கவனிச்சீங்களா?..

அதே சமயம் படத்தில் சில குறியீடுகளை கவனித்து இது இந்தியன் தாத்தா சேனாதிபதி கிடையாது. அவர் இறந்து விட்டார். 

இந்தியன் 2 திரைப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருப்பது சேனாதிபதியின் மகன் சந்துரு என்றும்.. அவர் எப்படி சேனாதிபதியின் தாக்குதலில் இருந்து தப்பித்தார்..? 

எதனால் இந்தியன் தாத்தாவாக தன்னை மாற்றிக்கொண்டார்..? என்பது தான் கதையாக இருக்க கூடும் என்று இணைய பக்கங்களில் ரசிகர்கள் பல்வேறு தங்களுடைய யூகங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இதனை அடுத்து திரையரங்குகளில் திரைப்படம் வெளி வந்த பிறகு தான் இவர்களின் யூகங்கள் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்பது தெரியவரும் என்று சொல்லலாம்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version