இந்தியன் 2.. கெத்தை இழந்த ஷங்கர்.. யார் பேச்சையும் கேக்கல.. பிரமாண்டத்தை வீழ்த்திய பிடிவாதம்..!

தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று தான் அழைப்பார்கள்.

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் என்ற கருத்துக்கு ஏற்ப இவரது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆகிவிடும்.

அந்த வகையில் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் இந்தியன் 2 படமானது ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

இந்தியன் 2..

இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தியன் 2 படமானது 2017-ஆம் ஆண்டில் இருந்து படப்பிடிப்பு நடந்த வந்துள்ளது. அந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த படமானது வெளி வருவதில் தாமதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து திரை உலகில் வெளி வந்த இந்த படமானது தற்போது வெற்றி அடையாத படமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாகவும் மாறி உள்ளது. இதற்கு காரணம் ஷங்கர் தான் என்ற பேச்சுக்கள் பெருமளவு அடிபடுகிறது.

மொத்த கத்தையும் இழந்த ஷங்கர்..

இந்தப் படத்தின் கதை பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு படம் மொக்கையாக அமைந்து விட்டதை அடுத்து இதற்குக் காரணம் ஷங்கர் என்று சொல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

மேலும் யார் பேச்சையும் கேட்காததை அடுத்து இந்த பிரம்மாண்டமான பட வெற்றி வீழ்ந்து விட்டதற்கு காரணம் அவருடைய பிடிவாதம் என்ற உண்மை நிலையை திரை விமர்சகர் பிஸ்மி விளக்கி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளி வரும் முன்பே இந்த படம் பற்றி சுற்றி இருந்தவர்கள் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். மேலும் படம் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று சொன்னதையும் கேட்காமல் ரிலீஸ் செய்து விட்டார்.

இதில் உலகநாயகன் கமலஹாசனும் அவருடைய கருத்துக்களை உதயநிதி மற்றும் லைக்கா நிறுவனத்திடம் கூறி ஒதுங்கி சென்று விட்டார். அது போலவே இளம் இசை அமைப்பாளர் அனிருத்தும் அவருடைய கருத்துக்களை லைக்கா நிறுவனத்திடமும் ரெட் லைட் மூவி இடமும் சொல்லி ஓரம் கட்டி விட்டார்.

இப்படி பல நபர்கள் படத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே கணித்து படத்தை தயாரித்தவர்களிடமும் உதயநிதியிடம் கூறிய விஷயங்களை ஷங்கரிடம் கூறாமல் இருந்தார்கள். அப்படி ஒரு வேளை ஷங்கரிடம் கூறி இருந்தாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கேட்பாரா? என்று சொல்ல முடியாது.

பிரம்மாண்டத்தை வீழ்த்திய பிடிவாதம்..

தற்போது படம் ரிலீஸ் ஆகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரக்கூடிய வேளையில் படத்தில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது கட் செய்து இருக்க வேண்டும் என்று அன்றே இவர்கள் பேசியது பற்றி பேச்சுக்கள் இன்று அடிபடுகிறது.

மேலும் 11 நிமிடம் 56 செகண்ட் படத்தின் நீளம் குறைக்கப்பட்ட போதும் படம் திரைக்கு வந்து எந்த ஒரு பயனும் இல்லை. குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆவது கட் செய்து இருந்தால் கட்டாயம் வெற்றி பெற்ற பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

ஏற்கனவே பல வெற்றி படங்களை கொடுத்த ஷங்கர் தற்போது இது போன்ற தோல்வி இதை சந்திக்கும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் இந்த விஷயத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற கேள்வியும் வைக்கப்பட்டது.

இதை அடுத்து இந்த படத்தின் மூலம் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கும் ஷங்கருக்கு மார்க்கெட் கீழே விழுந்தது போல் ஓர் உணர்வு கண்டிப்பாக ஏற்படும். ஆனாலும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு இந்த நிலை ஏற்படுவது சகஜம் தான்.

எனினும் இந்தத் தோல்விக்கு முழு காரணமும் ஷங்கர் தான் இவருடைய பிடிவாதத்தால் தான் இந்தியன் 2 நிலைமை இப்படி ஆனதாக பேசி இருக்கும் பேச்சானது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam