இது Hulk Hogan தாத்தா.. யார ஏமாத்த பாக்குறீங்க.. இந்தியன் தாத்தாவை பார்த்து கதறும் 90ஸ் கிட்ஸ்..!

1996 இல் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்ற படமாக இருந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் ஷங்கரின் வெகு நாள் கனவாக இருந்தது.

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். ஷங்கர் 2018 ஆம் ஆண்டில் துவங்கி உருவான இந்தியன் 2 திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

விமர்சனத்துக்குள்ளான இந்தியன் 2:

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியான பொழுது அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்று படத்தின் விமர்சனம் என்பது அதிகபட்சம் எதிர்மறையான விமர்சனங்களாகவே இருந்திருக்கின்றன.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்று இருக்கிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகுவதற்கு தாமதம் ஆனாலே அந்த திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் குறைய தொடங்கிவிடும்.

கிட்டத்தட்ட இந்தியன் திரைப்படத்திற்கும் அதேதான் நடந்திருக்கிறது படப்பிடிப்பு துவங்கி ஏழு ஆண்டுகள் கழித்து பல பிரச்சனைகளை தாண்டி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. இதுவே இந்த திரைப்படத்தின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கிராபிக்ஸ் காட்சிகளில் பிரச்சனை:

ஏனெனில் படத்தின் கதைகளம் அரசியல் சார்ந்த கதைகளமாக இருக்கிறது ஆனால் இந்த ஏழு வருடத்தில் அந்த அரசியல் சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. மேலும் இந்தியன் 2 படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் படம் குறித்த எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது.

படம் பற்றி எவ்வளவோ அதிக எதிர்பார்ப்புகளை படக்குழுவினர் உருவாக்கினாலும் கூட படத்திற்கு அந்த எதிர்பார்ப்பு தற்சமயம் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இதற்கு நடுவே படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் குறித்து அதிக எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

படத்தில் வயதான இந்தியன் கதாபாத்திரமாக வரும் கமல் கட்டுமஸ்தான உடலுடன் தோன்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. அந்த காட்சிகளை பார்க்கும் பலரும் ஹல்க் திரைப்படத்தில் வரும் ஹோகன் தாத்தா மாதிரி இருக்கிறார் இந்தியன் தாத்தா என்று கூறி கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version