இரண்டு ஆஸ்கார் அள்ளிய இந்திய திரையுலகம் ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நாட்டு நாட்டு

இந்தியாவிற்கு 2 ஆஸ்கார் அவார்டுகள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் . பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன் ஜூனியர் என்டிஆர் நடித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு எனும் பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த நிலையில் இந்தப் பாடல் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் சிறந்த ஒரிஜினல் இப்பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றிருக்கிறது.

இந்த விருதை இந்த பாடலுக்கு இசையமைத்த கீரவாணி மற்றும் பாடலை எழுதிய சந்திர போஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இதன்மூலம் ஒரு இந்திய படத்துக்காக ஆஸ்கார் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார்.

தி எலிபாண்ட் விஸ்பரர்

இரண்டாவது ஆஸ்கார் அவார்ட் தி எலிபாண்ட் விஸ்பரர் என்ற ஆவணப்படம் குறும்படத்திற்கு கிடைத்துள்ளது . இந்தக் குறும்படம் , கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகோட்டையில் யானையை பிரிந்து தவித்த மூன்று மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும் அதேபோல் சத்தியமங்கலம் படத்தில் தாயை பிரிந்த அம்முகுட்டி என்கின்ற யானையும் முதுமலையில் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

பாகனிடம் வனத்துறை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது இந்த இரு யானைகளையும் தங்கள் பிள்ளைகளைப் போல வளர்த்து வந்த அந்த பாகம் மற்றும் அவரது குடும்பம் ஆகியோரை வைத்து எடுக்கப்பட்டதுதான் இந்த தி எலிபாண்ட் விஸ்பரர் என்ற குறும்படம். இந்த குறும்படத்தை இரண்டு ஆண்டுகளாக ஊட்டியில் தங்கி மும்பையைச் சேர்ந்த கார்த்திக் கொன்சால்வெஸ்என்ற பெண் இயக்குனர் படமாக்கியிருந்தார்.

தற்பொழுது சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இந்த குறும்படம் இந்த படம் வென்றுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைக்கும் இரண்டாவது ஆஸ்கார் அவார்ட் ஆகும். இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …