Site icon Tamizhakam

அனிருத்தை வெறிகொண்டு துரத்தும் இந்தியன் தாத்தா..! இது தான் காரணமாம்..!

இசையமைப்பாளர் அனிருத்தை இந்தியன் தாத்தா வெறிகொண்டு துரத்துவது போன்ற மீம்கள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

தமிழ் சினிமாவில் முற்றிலும் ஒரு புது விதமான Vibe-ஐ இந்த பாடலில் உணர முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெற்று இருந்த பாடலை காட்டிலும் இந்த பாடல் ஒரு படி மேலே இருப்பதாகவும் அனிருத் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்றும் பொதுவான ரசிகர்கள் கருத்தை கூறி வருகின்றனர்.

அதேபோல இந்த பாடலை விமர்சிக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் பாடலை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்தியன் தாத்தா அனிருத்தை வெறிகொண்டு துரத்துவது போன்ற மீம்கள் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

எனக்கு மட்டும் தாத்தா வராரு கதற விடப உடப்போறாரு.. புதர்ல உடப்போறாரு.. அவருக்கு மட்டும் ஹன்ட்டர் வண்ட்டார் சூடு கண்ணாவா.. என்று இந்தியன் தாத்தா அனிருத்தை துரத்துவது போன்ற இந்த கருத்து படங்கள் இணையத்தில் சிரிப்பல யைஏற்படுத்தியிருக்கின்றன.

மட்டுமில்லாமல் இந்த மனசுலாயோ பாடலும் அதே இந்தியன் படத்தில் இடம்பெற்ற தாத்தா வராரே.. பாடலின் இசையை காப்பி அடித்தது போல தான் இருக்கிறது.

ஒருவேளை இதற்காக கூட இந்தியன் தாத்தா அனிருத்தை துரத்தலாம் என  பங்கமான கருத்துக்களை பதிவிட்டு வரும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Exit mobile version