தற்போது 28 வயதாகும் இளம் சிட்டு நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக நீச்சல் உடையிலும் நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாடு வேலூரில் பிறந்த இவர் வேலூரிலேயே தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பல்வேறு மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் சுடர் ஒளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் ஹீரோவாக நடித்திருந்த வைபவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதற்கான அடித்தளமாகவும் அமைந்தது.
இந்த திரைப்படத்தில் நடித்த இவரை பார்த்த ரசிகர்கள் இவருடைய இயற்கையான அழகில் சொக்கித்தான் போனார்கள். அதிக அளவு மேக்கப் இல்லாமலேயே ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் என்று கூறலாம்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக தோற்றம் வாட்ட சாட்டமான உடல்வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருந்த இவர் மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகு மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமா ரேங்க், மகாமுனி, சூப்பர் டூப்பர், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில், மூக்குத்தி அம்மன், சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது காக்கி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜி5 OTT தளத்தில் வெளியான திரவம வெப் சீரிஸில் சகானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தாமல் இருந்த நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கக்கூடிய க்ரைம் திரில்லர் ஜானர் கதை அம்சம் கொண்ட நடிகை ஒரு வெப் சீரிஸில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து தான் கிடக்கிறார்கள்.
Summary in English : Induja Ravichandran, the talented actress who rose to fame with her role in Meyaatha Maan, has taken a bold step to commit to act in swimsuit for her upcoming web series. She has accepted this challenge in order to break the general perception that women actors should not be seen wearing swimsuits and is determined to show the world that women can be beautiful and confident in whatever they wear.