தமிழ் சினிமாவில், நடிப்பாற்றல் மிக்க நடிகைகளில் இனியாவும் (Iniya) ஒருவர். குக்கிராமத்தில் வாழும் சமையல்கார பெண்ணாகவும் இவரது கதாபாத்திரம் பேசும். நாகரிக மங்கையாக, கிளாமரில் நடிப்பிலும் இவரால் அசத்தவும் முடியும். கதையில் தன் கேரக்டரை மிக தெளிவாக வெளிப்படுத்தும் நல்ல நடிகையாக, பல படங்களில் இனியா நிரூபித்திருக்கிறார்.
இனியா, கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்தவர். ஸ்ருதி சாவந்த் என்பது, இவரது உண்மையான பெயர். சினிமாவுக்காக, இனியாவாக என பெயர் மாறி இருக்கிறார். இனிக்கும் தோற்றம் கொண்டவராக ரசிகர்களை அசத்துகிறார்.
இனியாவுக்கு ஒரு சகோதரி, ஒரு சகோதரர் உள்ளனர். இனியா, நிறைய மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆங்கில குறும்படம் ஒன்றில் நடித்த அனுபவமும் இவருக்கு இருக்கிறது. 4ம் வகுப்பு படிக்கும் போதே, குழந்தை நட்சத்திரமாக டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார் இனியா. அதனால், நடிப்புக்கலை இவருடனே வளர்ந்திருக்கிறது.கடந்த 2005ம் ஆண்டில் மிஸ் திருவனந்தபுரம் அழகி பட்டத்தை வென்ற இவருக்கு பட வாய்ப்புகள், வர ஆரம்பித்தது.
இவர் முதலில் தமிழில் அறிமுகமான படம். பாடகசாலை. அதன்பின்பு, மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில், சேரனின் தங்கையாக நடித்திருந்தார்.
Ineyaஅதன் பின் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த படம் வாகை சூட வா’ இயக்குநர் சற்குணம் இயக்கிய இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பல விருதுகளை வென்றது. இந்த படத்தில்தான் தம்பி ராமையாக மகளாக, கிராமத்தில் சாப்பாட்டுக்கடை நடத்தும் சமையல்கார பெண்ணாக நடித்திருந்தார்.
அடுத்து, அருள்நிதியுடன் மெளனகுரு படத்தில் இனியா நடித்தார். தங்கர்பச்சான் இயக்கிய அம்மாவின் கைபேசி படத்தை தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன், பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் இனியா. இதில், சில படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன.
Ineyaஇனியா நடித்த படங்களில், நான் சிகப்பு மனிதன் படத்தில், சற்று வில்லத்தனமான நடிப்பை தந்திருப்பார். அதே போல், வாகை சூட வா படத்தில், படிப்பறிவே இல்லாத குக்கிராமத்தில் சாப்பாட்டு கடை நடத்தும் தம்பி ராமையா மகளாக, தாவணி, பாவாடை அணிந்து மிக யதார்த்தமான நடிப்பை தந்திருப்பார். அதிலும், படத்தின் நாயகன் விமலை, இனியா காதலிக்கும் காட்சிகள் மிக மிக இயல்பாக அமைந்திருந்தன.
Ineyaமற்ற நடிகைகளை போலவே, கிளாமர் ரோல்களில் நடிக்கவும் இனியா தயக்கம் காட்டவில்லை. சில படங்களில், படு கிளாமராக நடித்து, ரசிகர்களை உசுப்பேற்றி இருக்கிறார். அதே போல், இப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவ்வப்போது படு கவர்ச்சியான தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்து விடுகிறார். இனியாவின் இளமை பொங்கும் உடல் அழகில் மயங்கிப் போகும் ரசிகர்கள், தினமும் அவரது புதிய பதிவுகளுக்கு காத்திருக்கின்றனர்.
Ineyaஒரு கட்டத்தில் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றுவந்த இனியா, சமீபமாக பட வாய்ப்புகள் இல்லாமல், இருந்து வருகிறார்.வழக்கமாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை அதிர வைக்கும் இனியா, இந்த முறை புடவையில் அசத்தும் அழகில், குடும்ப குத்துவிளக்காக புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். இனியா, புடவையிலும் அசத்தறாங்கப்பா என, ரசிகர்கள் குஷியுடன் லைக் பட்டனை தெறிக்க விடுகின்றனர்.