கோடி கணக்கில் செலவு செய்து வீடு..! ஆல்யா மானசா சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சன் டிவிக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சீரியல் நடிகை ஆல்யா மானசா. இந்தத் தொடரில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் அற்புதமாக நடித்த இவர் அந்த தொடரில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஆல்யா மானசா சமூக வலைத்தள பக்கங்களில் தனது மகளோடும் மகனோடும் அடிக்கும் லூட்டிகளை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

ஆல்யா மானசா..

பார்ப்பதற்கு படு கியூட்டாக சினிமா நடிகைகளுக்கே டப் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கும் ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை செய்து வருகிறார்.

இதனை அடுத்து பெருவாரியான ரசிகர்களை கொண்டு இருக்க கூடிய ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவும் சன் டிவியில் கயல் சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த இரண்டு சீரியல்கள் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தக்க இடத்தை பிடித்துள்ளதோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிலையில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி இருக்கிறார்கள். இந்த வீடு பற்றிய விவரங்கள் பலவற்றை அவர்கள் இணையங்களில் ரசிகர்களின் மத்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கோடி கணக்கில் செலவு செய்து வீடு..

ஏற்கனவே 1.5 பி ஹெச் கே வீட்டில் வசித்து வந்த சஞ்சீவ் ஆல்யா அவரது தாய் தம்பி குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த புது வீட்டை ஆசை ஆசையாக கட்டி வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சின்னத்திரையைச் சார்ந்த அத்தனை நபர்களையும் அழைத்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே கோவையில் இருந்த சொந்த வீட்டை அப்பாவின் மருத்துவ செலவிற்காக வித்து சென்னை வந்து கஷ்டப்பட்ட இவர்கள் புது வீட்டினை கட்டி அந்த வீட்டுக்கு அம்மா அப்பா பெயரை வைத்திருப்பதாக மகிழ்ச்சி பொங்க சொல்லி இருக்கிறார்கள்.

ஆல்யா மானசா சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மேலும் இந்த புதிய வீடு பற்றி தகவல்களை சொன்னதோடு மட்டுமல்லாமல் சின்ன வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்ததை அடுத்து தற்போது இவர்களின் கனவு வீட்டை சுமார் 1.8 கோடி ரூபாய் செலவில் கட்டி இருப்பதாகவும் முழுக்க முழுக்க இந்த தொகை லோனில் இருந்து தான் எடுக்கப்பட்டு கட்டப்பட்டதாகவும் உருக்கமாக பேசி இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆல்யாவின் சம்பளம் குறித்து பேச்சுக்கள் எழுந்த போது 2022-ஆம் ஆண்டு முதல் இனியா தொடரில் நடிக்கும் போது தனது சம்பளம் ஒருநாள் ஷூட்டிங் க்கு 20,000 முதல் 25,000 வரை தரப்பட்டது என்றும் தற்போது அதே நிலை இல்லாமல் ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லி இருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒருநாள் சம்பளம் 50 முதல் 60,000 என்று வாய்ப்பிளந்த இருப்பதோடு மட்டுமல்லாமல் புது வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version