Site icon Tamizhakam

இப்படியான பசங்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்..! நடிகை இனியா ஓப்பன் டாக்..!

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாடக சாலை என்ற திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா.

இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும். 2005 ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் அறிமுகமானார். திரைப்படங்களில் அறிமுகமான பொழுதில் இவர் தன்னுடைய பெயரை நிர்மிஷா என்று மாற்றிக் கொண்டார்.

ஆனால், 2010 ஆம் ஆண்டு பாடகசாலை திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது இனியா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு யுத்தம் செய் வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாகவே இருக்கிறார் நடிகை இனியா என்றாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கனவுக்கன்னியாக இருக்கும் நடிகை இனியா இணைய பக்கங்களில் அப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்..? எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை இனியா. பெண்கள் என்றால் ஆண்கள் கட்டுமஸ்தாக இருந்தால்தான் பிடிக்கும் என்ற ஒரு எண்ணம் பொதுவாக அனைவரும் இருக்கிறது. அது உண்மை கிடையாது.

ஒரு ஆண் அவனுடைய தோற்றம் எப்படி இருக்கிறது என்பது பெண்களுக்கு முக்கியமே கிடையாது. ஒரு ஆண் பார்பதற்கு ஸ்மார்டாக இருக்கணும்.. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.. கலகலப்பாக பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். இப்படி இருக்கும் ஆண்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் என கூறியிருக்கிறார் நடிகை இனியா.

Exit mobile version