வாகை சூட வா ஹீரோயின் இனியாவை நியாபகம் இருக்கா..? உடல் குண்டாகி இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

சில நடிகைகள் பார்த்தவுடன் மனதில் நின்றுவிடுவார்கள். லட்சணமாக முகமும், வசீகரமான உடல் தோற்றமும் வெகு எளிதில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விடும். அந்த வகையில் சூப்பர் பிகர் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு செம அழகிகளாக சில நடிகைகள் இருந்து விடுகின்றனர்.

இனியா

வாகை சூட வா படத்தை பார்த்த யாராலும், நடிகை இனியாவை மறக்கவே முடியாது. சரசர சர சாரைக்காத்து வீசும்போது பாடலில், மழையில் நனைந்து, ரசிகர்களின் மனதை குளிர வைத்திருப்பார் இனியா.

வாகை சூடவா

வாகை சூட வா படத்தில் விமல் நாயகனாக நடித்திருப்பார். கிராமத்தில் சாப்பாட்டுக்கடை நடத்தி வரும் தம்பி ராமையா மகளாக அருமையான நடிப்பை இனியா வெளிப்படுத்தி இருப்பார்.
கேரளாவைச் சேர்ந்த இனியா, குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தமிழிலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். டிவி சீரியல், வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நாயகியாக இருக்கிறார்.

பாடக சாலை, யுத்தம் செய், வாகை சூடவா, நான் சிவப்பு மனிதன், மெளன குரு, சென்னையில் ஒரு நாள், கண் பேசும் வார்த்தைகள், காக்கா முட்டை என பல படங்களில் இனியா நடித்திருக்கிறார்.இதில் வாகை சூடவா படத்தில் நடித்ததற்காக விருது பெற்றிருக்கிறார். ஏனெனில் இந்த படம் கல்வியறிவு பெறுவது குறித்த விழிப்புணர்வு படமாகவும் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. குடும்ப குத்து விளக்கு விஜயலட்சுமியா இது..? மிரண்டே போன ரசிகர்கள்..!

தமிழில், மலையாளத்தில் பல படங்களில் நடித்தும் இனியா, முக்கியமான முன்னணி நாயகியாக வெற்றிப் பெற முடியவில்லை. இரண்டாம் நிலை, மூ்னறாம் நிலை கதாநாயகன்களுக்கு ஜோடியாக நடித்த அவருக்கு, முன்னணி டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லை.

கண்ணான கண்ணே..

சன்டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் இனியா நடித்திருந்தார். அதே போல் மலையாளத்தில் கானல் பூ என்ற சீரியலிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் டிவி சேனல்கள், மலையாள டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களிலும் அவர் நிறைய கலந்துக்கொண்டார்.

மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான விலங்கு என்ற வெப் தொடரிலும், போலீஸ் அதிகாரியான விமலுக்கு மனைவியாக நடித்திருந்தார். இப்படி தனக்கான வாய்ப்புகள் எப்படி வந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார் இனியா.

கவர்ச்சியான புகைப்படங்கள்

ஆனாலும் அவருக்கான இடத்தை அவரால் அடைய முடியவில்லை. அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: என் புருஷனை பிரிய காரணம் இது தான்.. போட்டு உடைத்த ரோஜா பிரியங்கா நல்காரி..!

உடல் குண்டாகி…

சமீப காலமாக அவர் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களில் அவர் உடல் பருமனாகி குண்டாக காட்சி தருகிறார். வாகை சூட வா ஹீரோயின் இனியா, உடல் குண்டாகி இப்போ எப்படி இருக்காரே என ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version