“அட உள்ளாடைக்கும் எக்ஸ்பைரி தேதி உள்ளதா..!” – இம்புட்டு நாள் தெரியாம போச்சே..!

சில பேர் அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடையை இரண்டு வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்துவார்கள். மேலும் தினசரி நமது உள்ளாடை துவைத்து தான் நாம் பயன்படுத்த வேண்டும். எனவே இந்த உள்ளாடைகளை பயன்படுத்துவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நாள் வரை மட்டுமே அந்த உள்ளாடையை பயன்படுத்துவது உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

Inner wear

எனவே உங்கள் உள்ளாடைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதனை எத்தனை நாள் நீங்கள் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உள்ளாடை பராமரிப்பு முறைகள்

நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடையை குறைந்த பட்சம் 6 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை பயன்படுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

Inner wear

மேலும் இந்த உள்ளாடையை நீங்கள் எப்போது தூக்கி எறிய வேண்டும் என்பதை உங்கள் உள்ளாடையே உங்களுக்கு காட்டி கொடுத்து விடும். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடையை தினமும் துவைத்து பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது. இதன் மூலம் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து  உள்ளாடை தப்பித்து விடும்.

மேலும் சில பேர் ஒரே ஒரு உள்ளாடையை மட்டும் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதை கட்டாயம் தினமும் துவைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு நுண்ணுயிரிகளால் பாதிப்புகள் அதிகளவு ஏற்படும்.

Inner wear

அதுமட்டுமல்லாமல் அந்த உள்ளாடைகளில் பாக்டீரியாக்கள் வளர தொடங்குவதின் மூலம் உங்கள் சிறுநீரகப் பாதையில் தொற்று, ஈஸ்ட் தொற்று, தோல் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதன் மூலம் சருமமும் பாதிப்படையும்.

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவு வியர்வை ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் உள்ளாடையை உடனே மாற்றி விடுங்கள். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், மற்ற நாட்களிலும் இடுப்பு பகுதியில் அதிக அளவு வியர்வை ஏற்படும். அந்த சமயங்களில் நீங்கள் உடனுக்குடன் உங்கள் உள்ளாடையை மாற்றுவது மிகவும் சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் தொற்று ஏற்பட்டு அந்தப் பகுதியில் அரிப்பு ஏற்படும்.

Inner wear

குறைந்தபட்சம் உங்கள் உள்ளாடையின் ஆயுட்காலம் ஒரு வருடமே எனவே அது முடிந்ததும் நீங்கள் அதை தூரப் போடுவது தான் நல்லது. கிழியவில்லை, தொற்றுகள் இல்லை என்று அதை தொடர்ந்து பயன்படுத்துவது அவ்வளவு உதிதமானது அல்ல.

எனவே மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் நினைவில் கொண்டு உங்களது உள்ளாடையை சுத்தமாக தினமும் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் உரிய காலம் வந்தால் அதற்கு விடை கொடுப்பது மிகவும் அவசியமானது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …