Irfan’s view என்ற YouTube சேனலை நடத்தி விதவிதமான உணவுகளை குறித்து ரிவ்யூவ் செய்து அதை Youtube-ல் வீடியோக்களை வெளியேற்றி வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் யூடியூபர் இர்பான்.
இவர் தமிழ்நாடு மட்டும் இன்றி உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சென்று உணவை சுவைத்து சாப்பிட்டு அதன் சுவை எப்படி இருக்கிறது. அதை எப்படி சமைக்கிறார்கள் என்பது பற்றிய பல விஷயங்களை மக்களுக்கு பேசி வெளிப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.
யூடியூபர் இர்பான்:
சுருட்டை முடி , எதார்த்தமான பேச்சு, உற்சாகம் தொனிக்கும் குரல் இதுதான் இர்பானின் தனி அடையாளம் என்று சொல்லலாம்.
இவருக்கு தமிழ்நாடு உணவு பிரியர்கள் மட்டும் இன்றி உலகம் முழுக்க பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.
சென்னை பூர்வீகமாக கொண்ட இர்ஃபான் முதன் முதலில் ஆட்டோ ஓட்டுநராக தனது பணியை செய்து வந்தார்.
ஆரம்பத்தில் குடும்பம் மிகவும் வறுமையால் கஷ்டப்பட்டதால் பள்ளி குழந்தைகளுக்கு ஆட்டோ ட்ரைவர் ஆக பணியை செய்து அதன்மூலம் வருமானத்தை பெற்று வந்தார் .
அப்போதுதான் வாழ்க்கையில் எதையாவது செய்து உழைத்து முன்னேறி வரவேண்டும் என்ற ஒரு முயற்சியால் YouTube ஆரம்பித்து தனித்துவமான கான்டென்ட் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.
ஆரம்பத்தில் அவரது வீடியோக்கள் மக்கள் கவனத்தை பெரிதாக ஈர்க்காமல் இருந்ததை அடுத்து vlog பயணத்தை தொடங்கிய இர்ஃபானுக்கு அதில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் கிடைத்த நல்ல வேலை வாய்ப்புகளையும் விட்டுவிட்டு முழு நேர YouTuber ஆக தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று உணவுகளை ரிவ்யூ செய்து வந்தார்.
குறுகிய காலத்திலே உச்சகட்ட வளர்ச்சி:
இதன் மூலம் அவர் சுமார் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து
சமூக வலைதள பக்கங்களிலும் இவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதோடு பல நட்சத்திர பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து உணவு அருந்துவது உள்ளிட்ட வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டதுன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார்.
அவர் வளர்ச்சியடைந்த வேகத்தில் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் செங்கல்பட்டில் தன்னுடைய கார் விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவரை காரில் ஏற்றி சம்பவ இடத்திலேயே அவர் மரணித்து போன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .
அதை அடுத்து தற்போது தன்னுடைய மனைவி கர்ப்பமான நிலையில் துபாய்க்கு சென்று மருத்துவமனையில். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் பாலினத்தை அறிந்து அதை தனது நண்பர்கள் மற்றும் YouTube பிரபலங்களை அழைத்து பார்ட்டி வைத்து கொண்டாடியது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
கருவில் இருக்கும் பாலினம் அறிந்த இர்பான்:
கருவில் இருக்கும் பாலினத்தை அறிவது இந்தியாவில் மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இர்பான் இடம் விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை மருத்துவ துறை அமைத்தது.
மேலும் இந்த குற்ற தண்டனைக்கு இர்பானுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என சட்டத்தில் இருக்கிறது.
இதை அடுத்து தமிழகம் மருத்துவத்துறை சார்பில் இர்பானிடம் விளக்கம் கேட்டு சமன் அனுப்பப்பட்டது. உடனடியாக அந்த வீடியோவை நீக்க கோரியும் யூடியூப் நிர்வாகத்திற்கும், சைபர் குற்ற பிரிவுக்கு கடிதம் அனுப்பியது.
இதை அடுத்து இர்ஃபான் YouTube தளத்தில் இருந்த தன்னுடைய வீடியோவை நீக்கி அதற்காக மன்னிப்பையும் கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் அப்படியே விட்டு விட்டார்கள். ஆனால் சமூக வலைதளவாசிகளும் நெட்டிசன்களும் இவ்வளவு பெரிய தவறை செய்த இர்பான் ஒரு பிரபலம் என்பதால் பணம் படைத்தவர் என்பதால் தண்டனை கொடுக்கவில்லையா? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அறிவித்த சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான் மன்னிப்பு கோறினார் என்று அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அரசு, நீதித்துறை மீது மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இது பொதுவெளியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. இர்பானின் இந்த செயல் பொதுமக்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்பதெல்லாம் அடுத்த விஷயம்.
ஆனால், ஏற்கனவே இதே தவறை செய்து தண்டனை அனுபவித்தவர்கள் இந்த செய்தியை பார்க்கும் போது எப்படி உணர்வார்கள்..?
பணம் படைத்தவருக்கு ஒரு நீதியா?
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கருவில் உள்ள பாலினத்தை கண்டறிய முயற்சி செய்தது.. கண்டறிந்து கருவை கலைத்தது போன்ற குற்ற சம்பவங்களுக்காக பலரும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படி தண்டிக்கப்பட்டவர்களும் அவருடைய குடும்பத்தினரும் இர்ஃபான் விவகாரத்தை பார்த்தால் என்ன நினைப்பார்கள்.
பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி..? பணம் இல்லாதவர்களுக்கு ஒரு நீதி..? பிரபலங்களுக்கு ஒரு நீதி..? சாமானியனுக்கு ஒரு நீதி..? என்று நீதித்துறையின் மீதும்.. அரசு துறையின் மீதும்.. நம்பிக்கை இழந்து விட மாட்டார்களா?
இதனை எப்படி இவ்வளவு எளிமையாக கடந்து செல்கிறார்கள் என்று புரியவில்லை.. என்று பல்வேறு இணைய வாசிகள் தங்களுடைய இணைய பக்கங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.
மேலும் இனிமேல் இதுபோன்ற தவறை யார் செய்தாலும் அவர்கள் மன்னிப்பு கேட்டால்.. அரசு அந்த மன்னிப்பை ஏற்று அவர்களை தண்டிக்காமல் விட்டு விட வேண்டும்.
இதற்கு சம்மதமா..? என்றும் கொந்தளித்து வருகிறார்கள். இர்ஃபானின் இந்த விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.