இளசுகள் முதல் பெருசுகள் வரை.. இரும்பு சத்தை அள்ளித்தரும் இயற்கை உணவுப்பொருட்கள்…!

இரும்பு சத்து என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். இரும்புச்சத்து குறைபாட்டால் ஏராளமான மக்கள் கடுமையான பகுதிக்கு இன்று உள்ளாகி இருக்கிறார்கள். இந்த குறைபாட்டை அனிமியா என்று கூறுவார்கள். மேலும் தமிழில் இதை ரத்த சோகை என்று நாம் அழைக்கிறோம்.

 இந்த இரும்பு சத்து தான் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் லெவலை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது .மேலும் ரத்தத்தில் 11ல் இருந்து 15 கிராம்/லிட்டர் அளவுக்கு  இரும்பு சத்து கட்டாயம் இருக்க வேண்டும்.

அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் இயக்கங்கள் சரியாக நடக்கும்.எனவே நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் எந்த உணவில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது என்பதை இனி காணலாம்.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள்:

 பொதுவாகவே கீரை வகைகளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. எனவே உணவில் தினமும் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக் கொள்வதின் மூலம் இரும்பு சத்து அதிக அளவு நமக்கு கிடைக்கும்.

 அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான இரும்பு சத்து அதிக அளவு நமக்கு கிடைக்கிறது.

இக்கீரையை பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள்  உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுதல் அவசியமானது.

 முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, வால்நட், பழங்கள் போன்றவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதும் போதும் இரும்பு சத்து நமக்கு கிடைக்கும். உணவில் இதை சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள் குறுந்தீனியாக கூட மாலை நேரங்களில் ஒன்று இரண்டு பாதாம் பருப்பு அல்லது முந்திரிப்பருப்பு பேரிச்சம் பழம் இவற்றை கட்டாயம் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

 இல்லையெனில் இரவு உறங்கச் செல்லும் போது இந்த உலர்ந்த பருப்பு வகைகள் மற்றும் பேரிச்சையை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.

 பருப்பு வகைகளிலும் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுகிறது. குறிப்பாக சோயா, பீன்ஸ் பாசிப்பருப்பு போன்ற பருப்புகளில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் முழு கருப்பு உளுந்தை நீங்கள் முளைக்கட்டில் உண்பதின் மூலம் அதிக அளவு இரும்பு சத்து பெற முடியும்.

மேலும் டார்க் சாக்லேட்டில் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து அதிக அளவு காணப்படுவதோடு ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் இது செயல்படுவதால் உடலுக்கு மிகவும் அவசியம் என்று கூறலாம்.

எனவே  வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் ஏற்படும் எந்த டார்க் சாக்லேட்டில் 55% கோக்கோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மேற்கூறிய பொருட்களை வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் இரும்பு சத்து குறைபாட்டை அறவே ஒழிக்க முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …