தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான நம்பியார் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து பிரபலமான நடிகராக தென்பட்டார்.
தொடர்ச்சியாக சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதிரடியான சண்டை காட்சிகளில் அசத்தி இருப்பார் நம்பியார்.
நடிகர் நம்பியார்:
இதுவரை 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்து வந்தார்.
அத்துடன் இவர் குணசித்திர நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கொஞ்சம் வயதான பிறகு பல்வேறு திரைப்படங்களில் தாத்தாவாகவும் , அப்பாவாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றவராகவும் பார்க்கப்பட்டு வந்தார் .
இதனிடையே தேவேந்திரன் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்தவரான நடிகர் நம்பியார் தன்னுடைய 8 வயதிலேயே தந்தை இறந்து விட உதகமண்டலத்திற்கு குடி பெயர்ந்தார்.
இங்கு தான் பள்ளி படிப்பை 3ம் வகுப்பு வரை படித்திருந்தார். ஒவ்வொரு திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த பிரபலமான நடிகராகவும் அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் அசத்தி வந்த நடிகராகவும் பார்க்கப்பட்டார் .
நிஜ வாழ்க்கையில் ஹீரோ:
நடிகர் நம்பியார் திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு மிகச்சிறந்த ஹீரோ. ஆம், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைப்பிடித்து திரையுரையில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.
அதன்படி நம்பியார் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 வருடங்களாக சபரிமலைக்கு சென்று வந்தார். குடும்ப வறுமைக்காக நடிப்பு கலையை தேர்ந்தெடுத்த நடிகர் நம்பியார் முதன்முதலில் நவாப் ராசமாணிக்கம் என்ற நாடக குழுவில் சேர்ந்து சேலம் மைசூர் என சுற்றித்திரிந்து நாடகங்களில் நடிக்க வாய்ப்புகளுக்காக தேடி சுற்றித்திரிந்தார்.
நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அதே கம்பெனியில் சமையல் அறையில் உதவியாளராக இருந்து வந்தார்.
சமையல்காரனாக நம்பியார்:
அங்கு இலவச சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்ததால் தொடர்ந்து நடிப்புகளையும் துவங்கி பின்னர் பிற்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்தார் .
குறிப்பாக இவர் எம்ஜிஆர் உடன் வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் திரைப்படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோ என்று சொல்லலாம். தன்னுடைய வாழ்நாட்களில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்திருக்கிறார் நடிகர் நம்பியார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறைவனடி சேர்ந்தால் நடிகர் நம்பியார் 1946ம் ஆண்டு தன்னுடைய உறவுக்கார பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நம்பியாரின் மகன் யார் தெரியுமா?
இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவரது மகன்களில் ஒருவரான சுகுமாரன் நம்பியார் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத் தலைவராகவும், பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
பாஜகவில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் ராணுவத்தில் முன்பு பயிற்சியாளராகப் பணியாற்றியவர் சுகுமாறன்.
இதன் மத்திய கருப்புப் பூணைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில் கருப்புப் பூணைப் படையை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
இதனிடையே சுகுமாறன் நம்பியார் தன்னுடைய 60 வயதில் கடந்த 2012ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இருக்கும் இரன்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.