பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை மீனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பின்னர் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

பவ்யமான கேரக்டர் ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமாக மீனா பார்க்கப்பட்டு வந்தார்.

நடிகை மீனா:

குறிப்பாக பல நட்சத்திர நடிகர்கள் திரைப்படங்களில் கமிட்டானாலே அவர்களுக்கு ஜோடியாக மீனா தான் வேண்டும் என அடம்பிடித்து கேட்கும் அளவிற்கு மீனா தற்போதைய ஹிட் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வந்தார்.

அவர் திரைப்படங்களில் நடித்தாலே அந்த படம் மாபெரும் ஹிட் ஆகிவிடும் என்ற அளவுக்கு மீனா தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வந்தார்.

குறிப்பாக இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா கிட்டத்தட்ட 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

முன்னணி நடிகையாக ஜொலித்த மீனா:

ரஜினி கமல் அஜித் இப்படி பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மீனா. கிட்டதட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆன வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் பெற்றோர் பார்த்து வைத்து மிகப்பிரமாண்டமான முறையில் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு பின்னர் மீனாவுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தார்.

நைனிகா விஜய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான தெறி திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடித்ததன் மூலமாக தெறி பேபியாகவே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நைனிகாவும் திரைத்துறையில் ஒரு நல்ல அடையாளத்தோடு வலம் வந்தார்.

கணவர் மரணம்:

சமயத்தில் திடீரென அவரது கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் பூத்தொற்று காரணமாக திடீரென மரணித்து விட்டார்.

கணவரின் மரணத்தில் இருந்து மீள முடியாத மீனா மற்றும் அவரது குடும்பத்தினர். திரைத்துறையை சேர்ந்த நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஆறுதல்களை தெரிவித்து வந்தனர்.

இப்படியான சமயத்தில் மீனா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி இரண்டாவது இன்னிங்ஸை துவங்க ஆரம்பித்தார்.

இப்படி ஒரு சமயத்தில்தான் கணவரை பிரிந்து தனிமையில் இருக்கும் மீனாவின் மறுமணம் குறித்த வதந்தி செய்திகள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் படு சூடாகிவிடும்.

அந்த வகையில் பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து மீனா கிசு கிசுக்கப்பட்டார். குறிப்பாக நடிகர் தனுஷை அவர் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

தனுஷ் உடன் மறுமணம்:

இது வெறும் வதந்தி என மீனாவும் கூறி இருந்தார். யாரும் இதை நம்பும்படியாக இல்லை எனவும் ரசிகர்களும் தெரிவித்து வந்ததை எடுத்து தற்போது சுசித்ரா இது வதந்தியே கிடையாது உண்மை என தனது பேட்டியில் கூறி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அதாவது, பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் நடிகை மீனாவும் தனுஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பேசியிருந்தார்.

இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷும் மீனாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தகவல்கள் பரவியது.

அப்போது இது வதந்தி என பலரும் கூறினார்கள். ஆனால் தற்பொழுது திரையுலகையை சேர்ந்த பிரபல பாடகியான சுசித்ராவே இதனை தெரிவித்து இருக்கிறார்.

வதந்தியை உறுதிப்படுத்திய சுசித்ரா:

அதே போல நடிகர் தனுஷின் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கிறது. எதனால் அவர் விவாகரத்து செய்தார் என்று இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை .

மறுபக்கம் மீனாவும் தனுஷும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தொரையுலகத்தை சார்ந்த பிரபலமே கூறுகிறார்.

இது எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இது வதந்தி கிடையாது என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சுசித்ரா என்று தான் யோசிக்க தோன்றுகிறது என பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version