ரஜினி மகளுடன் ஜெயம் ரவி திருமணம்..! பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..! அதிரும் கோலிவுட்.!

அட.. யார் கண் பட்டது என்று தெரியவில்லை என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவகாரம் பரவலாக காட்டு தீ போல இணையங்களில் பரவி மக்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

ஏற்கனவே ஜிவி பிரகாஷின் விவகாரத்தில் இருந்து மீள முடியாத ரசிகர்கள் பலரும் மீண்டும் ஜெயம் ரவி, ஆர்த்தியின் விவாகரத்து பற்றி செய்திகள் வருவதை பார்த்து புலம்பித் தள்ளி வருகிறார்கள்.

ரஜினி மகளுடன் ஜெயம் ரவி திருமணம்..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். பெற்றோர்களால் பார்த்து வைத்து செய்யப்படும் திருமணமானாலும் சரி அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அதனை பெற்றோர் மத்தியில் பேசி திருமணம் ஆக மாற்றினாலும் சரி இந்த பந்தமானது ஏழு ஜென்மம் தொடர வேண்டும் என்று சொல்லுவார்கள்.

எனினும் இன்று திரையுலகில் அடுக்கடுக்காக தொடர்ந்து வரும் நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்துக்கள் கலாச்சார சீரழிவின் சாட்சிகளா? என்று கேட்கக் கூடிய வகையில் மிக பெரிய அளவில் உள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் ஜெயம் ரவி சாக்லேட் பாயாக ஆரம்ப நாட்களில் வலம் வந்து ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் மீது காதல் கொண்ட ஜெயம் ரவி பெற்றோர்களது சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி தனது வீட்டு மாப்பிள்ளை ஆன பிறகு ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் தனது மாப்பிள்ளையை வைத்து சைரன், அடங்கமறு போன்ற வெற்றி படங்களை தயாரித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் தனது மாப்பிள்ளை நடிக்கக் கூடிய படங்களின் கதைகளை கூட அவர் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் கேட்பாராம். 

இந்நிலையில் தற்போது தனது மகளும் மாப்பிள்ளையும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வெளி வந்திருப்பதை அடுத்து இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..

அவர் பகிர்ந்த விஷயத்தில் ஜெயம் ரவி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள காரணமாக இருந்தவரே குஷ்பூ தான் என்ற விஷயத்தை சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் ஜெயம் ரவி ஆரம்ப காலத்தில் ரஜினியின் மகளை திருமணம் செய்ய இருந்ததாகவும் ஆனால் ஜெயம் ரவி பார்ப்பதற்கு படு அழகாக இருந்ததை அடுத்து தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆர்த்தியின் அம்மா வளைத்துப் போட்டு விட்டார் என சபிதா ஜோசப் பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

அதிரும் கோலிவுட்..

இதை தொடர்ந்து இந்த விஷயத்தை கேட்டு ஹாலிவுட் வட்டாரம் அதிர்ந்து போய் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மேலும் எதிர்வரும் நாட்களில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவகாரம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறியோடு அனைவரும் காத்திருக்கிறார்கள்.

அத்துடன் ரசிகர்கள் அனைவரும் அவசரப்பட்டு இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் பொறுமையாகவும் நிதானத்தோடும் முடிவை எடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி வருவதோடு அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version