விடுதலை படத்தில் சூரிக்கு இவ்வளவு சம்பளமா..? – வெளியான தகவல்..!

இயக்குனர் வெற்றிமாறன் இவர் ஒரு படத்தை இயக்கினால் அந்தப்படம் சிறந்த கதைக் களத்தையும் திரைக்கதையும் கொண்டிருக்கும். இவர் கடந்த காலங்களில் தனுஷை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்பொழுது விடுதலைப் படத்தையும் இயக்கி உள்ளார் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

இதில் விடுதலையின் முதல் பாகத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இப்படத்தில் சூரிய கதாநாயகனாக நடிக்கிறார், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் மிரட்டுகிறார்.

இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது .அப்பொழுது இன் மேடையில் பேசிய இளையராஜா, தான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளதாகவும் இந்த படம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.

வெற்றிமாறன் ஒரு நல்ல டைரக்டர் என்றும் புகழ்ந்து பாராட்டினார். இந்தப் படத்தின் டீசரை வைத்து பார்க்கும் பொழுது இந்த படத்தில் சூரி ஒரு கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நெகட்டிவாக தெரிந்தாலும் மக்களுக்காக போராடும் ஒரு மனிதராக தெரிகிறார்.நடித்திருக்கிறார்.

தற்பொழுது இந்த படத்தில் சூரி வாங்கிய சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது இதுவரை சூரிய காமெடியனாக மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம்.அதிலும் ரசிகர்கள் பலரும் அவருடைய காமெடி காமெடியே இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த படம் ஒரு ஹீரோவாக அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் சூரியை நடிக்க 30 லட்சம் பேசப்பட்ட தாகவும் மேலும் இரண்டு பாகங்களால் வருவதால் சூரியின் சம்பளம் 40 லட்சமாக படக்குழு உயர்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …