நடிகை நதியாவின் சகோதரியா இது..? இவ்ளோ நாள் தெரியாம போச்சே..

80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நதியா முதன்முதலில் பூவே பூச்சூடவா திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

நடிகை நதியா:

பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்த நதியா ரசிகர்களின் பேவரைட் நடிகை என்ற இடத்தையும் பிடித்திருக்கிறார்.

ஜெரினா அனுஷா மொய்டு என்ற இயற்பெயரை கொண்ட நடிகை நதியா அதன் பிறகு தன் திரைப்படத்திற்காக நதியா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

நதியாவின் பெற்றோர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் நடிகை நதியாவும் கடந்த. 1988 ஆம் ஆண்டில் சிரீஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் கணவரோடு சென்று செட்டில் ஆன நதியா அங்கு ஜனம் , சனா என இரண்டு மகள்களை பெற்றெடுத்தார் .

காதல் திருமணம்:

குழந்தைகள் பிறப்புக்கு பின்னர் குடும்பம் குழந்தைகள் என அப்படியே இருந்துவிட்டால் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்காக 2000 காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

அம்மா வேடங்களில் நடிக்க மீண்டும் இங்கு வந்து சேர்ந்தார். அதன் மூலம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அம்மாவாக நடித்த பெரும் புகழ்பெற்றார்.

அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய காம்பேக் கொடுத்த நதியாவுக்கு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது.

57 வயதாகியும் இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையோடு இருக்கும் நடிகை நதியா தொடர்ச்சியாக படங்களில் நடித்த வருகிறார்.

ஒரு காலகட்டத்தில் நதியா மிகப் பெரிய நடிகையாக பேசப்படும் அளவுக்கு திரைப்படங்களை எதை அணிந்து கொண்டு நடித்தாலும் அதற்கு பெயர் நதியா என மாறிவிடும்.

அப்படித்தான் நதியா வளையல்,நதியா செருப்பு,நதியா புடவை, நதியா சைக்கிள் என கொடிகட்டி பறந்தார் நதியா.

நதியாவின் சகோதரி:

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நதியா அவ்வப்போது தனது மகள் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசனையில் ரசனைக்கு ஆளாகுவார்.

குறிப்பாக நதியாவின் இளமையை அவரது ரசிகர்கள் வர்ணித்து புகழ்ந்து ரசித்து தள்ளுவார்கள்.

அந்த வகையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை நதியா சகோதரி மற்றும் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இதில் நதியாவின் சகோதரியை இவ்வளவு இளமையாக இருக்காங்களே என வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

நதியாவை போலவே ஒட்டுமொத்த குடும்பமும் இளமையாக இருப்பாங்க போலயே… என்னதான் டிப்ஸ் பாலோ பண்றாங்க? என அனைவரும் கமெண்ட் செய்து வியப்புடன் கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version