கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?

நடிகர் கமல்ஹாசன் இனி நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

விஜய் டிவிக்கும் கமலுக்கும் சண்டையா?

இதனால் என்ன ஆனது? விஜய் டிவிக்கும் கமல்ஹாசனுக்கும் ஏதேனும் சண்டையா? இல்லை அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டார்களா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது.

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க போவதில்லை என கூறியதன் காரணம் என்ன? என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

அப்படியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் இது குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது விஜய் டிவி சொல்வதை கமலஹாசன் கேட்பதில்லை கமல்ஹாசன் சொல்வதை விஜய் டிவி கேட்பதில்லை என பேசி வந்தார்கள்.

முக்கியமாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேடையிலே தன்னுடைய அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார் .

பிக்பாஸ் மேடையில் அரசியல் பேச்சு அவசியமா?

அரசியல் குறித்த பல பேச்சுகளை அவர் அங்கேயே தொடங்கியதால் விஜய் டிவிக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பிக்பாஸ் மேடையை முழுக்க முழுக்க தன்னுடைய அரசியல் பயணமாகவே மாற்றிக் கொண்டார். இதனால் நிகழ்ச்சி சார்ந்து பெரிதாக எதுவும் பேசவில்லை.

அந்த சமயத்தில் தான் கமல்ஹாசன் வாரம் முழுக்க நிகழ்ச்சியை பார்க்காமல் வந்து தொகுத்து வழங்குகிறார் என ரசிகர்களும் விமர்சித்து வந்தார்கள்.

இப்படியான நேரத்தில் அவர் ரூ. 200 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு விஜய் டிவி கொடுக்க மறுத்ததால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

சம்பளம் கொடுப்பதில் சண்டையா ?

ஆனால் அது உண்மையே இல்லை என பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால், கமல்ஹாசன் போன்ற ஒரு பிரம்மாண்டம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் தான் அதன் டிஆர்பி உச்சத்தை தொடும்.

எனவே கமல் கேட்கும் ரூ. 200 கோடி என்ன ரூ. 250 கோடியை கூட அள்ளிக் கொடுப்பார்கள் என்கிறது இன்னொரு வட்டாரம்.

அப்போ ஏன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்? எனக் கேட்டதற்கு… கமல்ஹாசன் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு திரைப்படங்களில் கூட நடிக்காமல் அமெரிக்கா செல்கிறார்.

அவர் அங்கு சென்று புதிய தொழில்நுட்பம் ஒன்றை முறையாக பயிற்சி பெற்று கற்று தெரிந்து வர இந்த முடிவை எடுத்துள்ளார் .

6 மாசத்துக்கு அமெரிக்காவில் கமல்:

எனவே இன்னும் 6 மாதத்திற்கு அவர் அமெரிக்காவில் தான் பயணிப்பார். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என செய்திகள் கூறுகிறது.

இதை அடுத்து கமல்ஹாசனின் அந்த இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூர்யா , சிம்பு உள்ளிட்ட பிரபலங்களின் பேச்சுக்கள் அடிபடுகிறது.

இதில் பெரும்பாலும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் அவர் தொகுத்து வழங்கும் சமையல் நிகழ்ச்சி சரியாக போகவில்லை.

எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை இனிவரும் நாட்களில் சிம்பு தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version