என் கல்யாணத்தை தடுக்க நினைத்தார் நடிகை திரிஷா..! விஜய் பட நடிகர் பகீர் புகார்..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்து களை கட்டி வரும் திரிஷாவின் கையில் அடுத்தடுத்து படங்கள் அதுவும் முன்னணி நடிகர்களோடு என்றால் அவர் காட்டில் மழை என்று தான் சொல்வீர்கள்.

நடிகை திரிஷா..

இளைஞர்களின் மனதில் எவர்கீரின் நடிகையாக இன்றும் இருக்கும் திரிஷா கில்லி படத்தில் தளபதி விஜய் உடன் நடித்ததை அடுத்து அண்மையில் லியோ படத்தில் தளபதிக்கு ரொமான்ஸ் சீனில் லிப் லாக்கில் முத்தம் அடித்து ரசிகர்களை திறங்க வைத்தார்.

இதனை அடுத்து தற்போது தல அஜித் படத்தில் நடித்த வரக்கூடிய இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு ராங்கி படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே டப் கொடுக்கக் கூடிய வகையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தளபதி விஜய் உடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்திருப்பதாக ஸ்ரீகாந்த் சொன்ன விஷயம் இணையங்களில் வைரலாகியுள்ளது.

என் கல்யாணத்தை தடுக்க நினைத்தார்..

இதனை அடுத்து பலரும் ஏன் இவர் ஸ்ரீகாந்தின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்திருக்கிறார் என்ற கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளார்கள். அதற்கு உரிய பதிலை நீங்கள் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே தமிழ் திரைப்படங்களில்  நடித்த இவர் ரோஜா கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து அடுத்தடுத்து சில படங்களை நடித்தார். 

எனினும் இன்று வரை தனக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் தவிக்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் வந்தனாவும் நடிகை திரிஷாவும் மிகச்சிறந்த தோழிகளாக இருந்துள்ள நிலையில் வந்தனா ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொள்ளப் போவது சொன்ன தகவலை அடுத்து திரிஷா அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்னதோடு ஸ்ரீ காந்திற்கு சரியாக ஆங்கிலம் பேச வராது என்ற விஷயத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

விஜய் பட நடிகர் பகீர் புகார்..

இதனை அடுத்து இந்த விஷயத்தை தனது வருங்கால கணவரிடம் வந்தனா சொன்னதை அடுத்து மனம் உடைந்து போன ஸ்ரீகாந்த் இதனைப் பற்றி நேரடியாகவே திரிசாவிடம் இப்படி சொன்னீர்களா? என்று கேட்டுவிட்டார்.

இதைக் கேட்ட நடிகை திரிஷா நான் செய்தது பிராங்க் தான் என்பதை ஓபன் ஆக சொன்னதை அடுத்து இந்த பிரச்சனை அத்தோடு முற்றுப்பெற்றது. எனினும் இது பற்றி தற்போது இணையங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.

மேலும் ஸ்ரீகாந்த் நடிகை வந்தனாவை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று வரை மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்.

இதனைத் தொடர்ந்து நடிகை திரிஷா ஸ்ரீகாந்தின் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தாரா? என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version