“16 வருஷம்.. இறுதியில் கசந்து போன திருமண வாழ்க்கை..” இனி வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்த விஜய் பட நடிகை..!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாக வளர்ந்து வந்த இந்த நடிகை தமிழில் காதல் கவிதை, நரசிம்மா உள்ளிட்ட பட படங்களில் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் என்று அடிகளவு விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாத காரணத்தினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகைகளில் சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொண்ட வேகத்திலேயே விவாகரத்தையும் செய்து விடுகிறார்கள்.

அந்த வகையில் திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், மண வாழ்க்கை கசந்து போய் விட இனி திருமண வாழ்க்கை வேண்டாம் என்று அதிரடி முடிவினை எடுத்து விவாகரத்து பெற்றிருக்கும் நடிகையைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் இந்த நடிகை தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவரது மார்க்கெட் விழ்ச்சியை சந்தித்த போது பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

திரைப்படங்களில் நடிப்பதோடும் நடனம் ஆடுவதோடும் நின்றுவிடாமல் இவர் அரசியலில் அதிகளவு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். மேலும் கிட்டத்தட்ட திரைப்படங்களில் நடித்து 17 ஆண்டுகள் கடந்து விட்டது என கூறலாம்.

இந்நிலையில் இவர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் அயலான் திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார். வரும் 2024 பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளி வரக்கூடிய நிலையில் உள்ளது.

மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 16 ஆண்டுகளாக சிறப்பாக வாழ்ந்து வந்த இவரது திருமண வாழ்க்கைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்து விவாகரத்து பெற்று இருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பரவி வருவதோடு இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்ற விசயத்தையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

விஜயகாந்துக்கு ஜோடி போட்டு நரசிம்மா திரைப்படத்தில் நடித்த இந்த நடிகை இஷா கோபிகர் தான் தற்போது விவாகரத்து பெற்றிருக்கிறார் விவாகரத்துக்கு பிறகாவது இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்து இவர் மீண்டும் திரையுலகில் ஜொலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam