படுக்கை அறை காட்சி பற்றி ஓப்பனாக கூறிய இவானா..!!

இவானா:இவர் கேரளாவை சேர்ந்த ஆலுவா என்ற ஊரில் பிறந்தவர். இவர் ‘அனுராக்கா கரிக்கின் வெல்லம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர்.இவானா இவர் 2018 ஆம் ஆண்டில் பாலா இயக்கிய நாச்சியார் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

2019 ஆம் ஆண்டில் வெளியான மதி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி படம் இல்லாததால் இவருடைய கேரக்டர் வெளியே அவ்வளவாக தெரியவில்லை.

பிறகு 2022-ல் கோமாளி படத்தை எடுத்த பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானார் இந்த கேரக்டர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.இவருடைய பெயர் இவனா என்று கூட மக்களுக்கு தெரியவில்லை.

இந்த படத்தில் இவருடைய பெயர் நிகிதா என்று மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டதால் மக்கள் அனைவரும் இவருடைய உண்மையான பெயரும் நிகிதா என்றே தோன்றும் அளவுக்கு அவருடைய நடிப்பு அவ்வளவு பிரமாதமாக இருந்தது. இதனால் இந்த படம் வசூல் ரீதியாக தமிழ் மற்றும் ஆந்திரா சினிமாவிலும் கொடிகட்டி பறந்தது.

இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனதிடம் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது. லவ் டுடே படத்தில் படுக்கையறை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.முதலில் இதை நான் எப்படி வீட்டில் சொல்வேன் என்று சங்கடமாக இருந்தது.பிறகு தைரியமாக வீட்டில் கூறிவிட்டேன். அவர்களும் கதைக்குத் தேவைப்பட்டால் தாராளமாக நடிக்கலாம் என்று அனுமதி அளித்தனர்.

எங்கள் வீட்டில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதனால் நான் முழு கவனத்துடன் படத்தில் நடித்தேன். இந்த காட்சி பெரிய அளவில் தவறாக சித்தரிக்கப்படவில்லை என்பதால் இவானா ஓப்பனாக பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் இது போன்ற சினிமா சம்பந்தமான கேள்விகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …