பலாக்கொட்டை இருக்கா..? – இதை பண்ணுங்க..! – குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்றாக திகழும் பலாப்பழம். இந்த பலாப்பழத்துக்குள் இருக்கக்கூடிய பலாக்கொட்டை – யை வீணாக்காமல் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ட்ரை பொறியலாக செய்து கொடுக்கும் போது இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

மேலும் இந்த பலாக்கொட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பலாக்கொட்டையில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் ஏ சக்தி அதிக அளவு இருப்பதோடு மட்டுமல்லாமல் புரதச்சத்தும் இரும்பு சத்தும் கூடுதலாக இருப்பதால் கிடைக்கக்கூடிய நாட்களில் கட்டாயம் வாங்கி பெற்றோர்கள் குழந்தைக்கு சமைத்துக் கொடுத்தால் நலலது.

பலாக்கொட்டை  ட்ரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

1.பலாக்கொட்டை அரை கிலோ

2.இஞ்சி பேஸ்ட்

3.வரமிளகாய் நான்கிலிருந்து ஐந்து வரை

4.தேங்காய் துருவல் அரை கப்

5.சிறிதளவு சீரகம்

6.தாளிக்க தேவையான எண்ணெய்

7.கடுகு

8.உளுத்தம் பருப்பு

9.கருவேப்பிலை

10.தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் பலாக்கொட்டையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை சிறிது நேரம் வெயிலில் அப்படியே போட்டு விடுங்கள். இதனை அடுத்து அந்த பலாக்கொட்டையில் மேல் இருக்கும் வெள்ளை நிற தோலை முழுமையாக நீக்கி விட வேண்டும்.

 தோளினை நீக்கிய பிறகு மீண்டும் ஒரு முறை நன்கு கழுவிக்கொண்டு குக்கரில் போட்டு ஐந்து முதல் ஆறு விசில் விடவும். பிறகு குக்கரை திறந்த பின் பலாக்கொட்டை வெந்து இருக்கிறதா என்பதை ஒரு கத்தியால் குத்திப் பார்த்தால் கத்தி முழுமையாக உள்ளே இறங்கும் பட்சத்தில் வெந்துள்ளது என்று அர்த்தம்.

 அல்லது உங்கள் கைகளால் அப்படியே பொடித்து விட்டால் அது பொடிய வேண்டும் எந்தப் பதத்தில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 இதனை அடுத்து நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பேஸ்ட் தேங்காய் துருவல் சீரகம் இதை மூன்றையும் நன்றாக மைய அரைத்து எடுக்கவும்.

 இதனை அடுத்து இதனுள் மீண்டும் வர மிளகாய் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும் இப்போது அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் தாளிக்க தேவையான பொருட்களான கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போடவும்.

 இவை இரண்டும் வெடிக்க கூடிய சூழ்நிலையில் நீங்கள் பொடித்து வைத்திருக்க கூடிய பலாக்கொட்டையை அப்படியே போட்டு ஒரு  கிளறவும்.

 இப்போது இதற்கு தேவையான உப்பை சேர்த்து விட்டு மீண்டும் கிளறி விடுங்கள். இதனை அடுத்து இதன் மேல் அரைத்து வைத்திருக்கும் அந்த மசாலா கலவையை போட்டு நன்கு பிரட்டி விடவும்.

இதில் பச்சை வாசம் செல்லும் வரை இந்தப் பிரட்டலை நன்கு பிரட்டி ஒரு நிமிடம் மூடி வைக்கவும். இதனை அடுத்து மூடியை திறந்து கருவேப்பிலையை உங்கள் கைகளால் பிரித்துப் போட்டு மீண்டும் சிறிதளவு தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றி ஒரு கிளறு கிளறவும்.

 இப்போது சூடான சுவையான பலாக்கொட்டை ட்ரை பொரியல் ரெடி இதை உங்கள் குழந்தைகளுக்கு அப்படியே உன்னை கொடுக்கலாம் அல்லது சாதத்தோடு சைடு டிஷ் ஆக வைத்து உண்ணவும் செய்யலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …