நடிகர் ஜெய் திருமணம்..! மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

முன்பெல்லாம் சினிமாவில் நடித்த சில நடிகர்கள், சில நடிகைகள் திருமணம் ஆன பிறகு கூட சினிமாவில் ஹீரோவாக ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சில நடிகர்கள், சில நடிகைகளுக்கு 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில், திருமண நிகழ்வுகளில் அவர்கள் இப்படி ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்களிடம் பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் கேட்கும் முதல் கேள்வி, உங்கள் திருமணம் எப்போது என்பதுதான்.

அதுமட்டுமின்றி இடையில் அவருடன் தொடர்ந்து சில படங்களில் நடிகரோ, நடிகையோ சேர்ந்து நடிக்கும் பட்சத்தில் அவருடன்தான் திருமணம், இருவருக்கும் காதல் என்ற வதந்தியும் மிக எளிதாக பரவி விடுகிறது.

அதே போல் சில நடிகர், நடிகைகளுக்கு இடையே அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டால், அவர்கள் லிவிங் டு ரிலேஷன்ஷிப் முறையில் வாழ துவங்கி விடுகின்றனர்.

இப்படியும் சில நடிகர்கள், நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தியும் சில மாதங்கள், சில ஆண்டுகள் ரிகர்சல் பார்த்து விடுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலும் இன்றைய தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்து கொள்வதை சில நடிகர்கள், நடிகைகள் பின்பற்றினாலும், அவர்களும் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஜெய்

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமாக கவனிக்கப்படும் இளம் நடிகராக இருந்து வருகிறார். துவக்கத்தில் அவர் நடித்த படங்கள் நல்ல கவனம் பெற்ற படங்களாக, பெரிய அளவில் வெற்றி பெற்றன.

குறிப்பாக சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள், ராஜா ராணி, பகவதி, கோவா, வாமணன், கலகலப்பு 2, காபி வித் காதல் என பல படங்களில் ஜெய் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

சுப்ரமணியபுரம்

குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தில் ஆக்சன் ஹீரோவாக சசிக்குமாருடன் ஒரு வித்தியாசமான நடிப்பை வழங்கியிருந்தார் நடிகர் ஜெய். இதற்கிடையே எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது, ஜெய்க்கும் நடிகை அஞ்சலிக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் லிவிங் டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

பிறகு ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரேக்கப் ஆகி பிரிந்து விட்டதாக தெரிய வந்தது.

வாணி போஜன்

அதன் பிறகு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த போது, நடிகை வாணி போஜன் உடன் ஜெய்க்கு நெருக்கம் ஏற்பட்டது. அஞ்சலிக்கு பிறகு அவருடனும் சில ஆண்டுகள் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்தார் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு சினிமா வாய்ப்புகளை இருவருமே இழந்ததால், வாணி போஜனையும் விட்டு விலகி பிரேக்கப் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

40 வயதுகளை கடந்து…

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜெய், எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. ஏனெனில் அவருக்கு வயது 40 களை கடந்து விட்டது. இப்படியே தாமதித்துக் கொண்டே போவது அவரது எதிர்காலத்தை பாதிக்குமே என்று அவர் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
லேபிள் வெப் சீரிஸ்

ஜெய் சமீபமாக நடித்த படங்களில் பெரிய அளவில் எதுவுமே வரவேற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அருண் காமராஜ் இயக்கிய லேபில் என்ற வெப் சீரிஸில் ஜெய் நடிப்பு பாராட்டை பெற்றது.

பிராக்யா நக்ரா

இந்நிலையில் தற்போது நடிகை பிராக்யா நக்ரா உடன் திருமணம் முடிந்து விட்டதாகவும், நியூ லைப் ஸ்டார்ட்டட் எனக் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கின்றனர். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. அப்படி என்றால் நடிகை பிராக்யா நக்ராவுடன் ஜெய்க்கு திருமணம் முடிந்து விட்டதா என்ற பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.

படத்தின் பிரமோ

ஆனால் அந்த போட்டோவின் பின்னால் கேமரா மற்றும் யூனிட் ஆட்கள் நிற்பதை பார்க்கும்போது, இது ஒரு படத்தின் ஷூட்டிங் காட்சி என்பதும் படத்தின் பிரமோசனுக்காக அவர்கள் வெளியிட்ட புகைப்பட பதிவு என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதெல்லாம் ரொம்பவும் பழைய கான்செப்ட் என நெட்டிசன்கள் ஜெய்யை கலாய்த்து வருகின்றனர்.

அப்படி என்றால் இந்த திருமணமும் பொய்யா, உண்மையில் ஜெய்க்குதிருமணமே நடக்கவில்லையா என்று ஜெய் ரசிகர்கள் புலம்புகின்றனர். நடிகர் ஜெய்க்கு திருமணம் நடந்துடுச்சு, மணப்பெண் பிரக்யா நக்ரான்னு நெனைத்தோமே என்று ஷாக் ஆகக் கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version