2023 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம் இருக்கிறோம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாகும் அமைந்தன. இதில் முன்னணி நடிகர்கள் விஜய் அஜித் ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு டப் கொடுக்கும் விதமாக நடிகர்கள் விஷால் உதயநிதி ஸ்டாலின் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோருடைய படங்கள் அமைந்தன.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் அதிக வசூலை வாரி குவித்த முதல் பத்து படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படம்.
தொடர்ந்து, ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி யோகி பாபு என பல்வேறு தமிழ் பிரபலங்கள் நடித்திருந்தால் தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது வசூலையும் வாரி குவித்தது.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருப்பது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம். காமிக்ஸ் கதைகளை எழுதக்கூடிய கதாநாயகன் ஒரு கட்டத்தில் அந்த தான் எழுதிய காமிக் கதையின் நாயகனாகவே மாறி தன்னுடைய பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை இந்த படத்தின் கதையாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் வசூலையும் வாரி குவித்தது.
இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது இயக்குனர் மாலை செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாஸில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம். நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில், ஆறாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர்கள் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ஃபேண்டஸி திரைப்படமான மார்க் ஆண்டனி.
இந்த திரைப்படம் டைம் ட்ராவல் அம்சத்தை மையக்கருவாக கொண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. காமெடியான திரைக்கதை மற்றும் எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனம் ஆகியவை இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் இது பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது மற்றும் தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களின் பங்களிப்பில் உருவான இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.
இருந்தாலும் வித்தியாசமான முயற்சி மற்றும் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பு ஆகியவை இந்த படத்துக்கு துணையாக நின்றன. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த பட்டியலில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் மூன்றாவது இடத்தையும், லியோ திரைப்படம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான நடிகர் விஜய் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி 195 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்திருக்கிறது.
வழக்கம் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 204 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.