அதற்காக 40 தடவை என்னை அலைய விட்டார்.. நடிகர் ஜனகராஜ் கூறிய வேதனை தகவல்..

தமிழ் திரையுலகை பொறுத்த வரை காமெடி நடிகர்களுக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. பொதுவாக திரைப்படங்களில் காமெடி இருந்தால் தான் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். அந்த வகையில் நடிகர் ஜனகராஜ் மிகச்சிறந்த காமெடி நடிகராக விளங்கி இருக்கிறார்.

நடிகர் ஜனகராஜ் தமிழ் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும், நகைச்சுவை கேரக்டர்களிலும் நடித்து கவுண்டமணி, செந்திலுக்கு போட்டியாக வளர்ந்தவர்.

நடிகர் ஜனகராஜ்..

இவர் 1971 ஒன்றாம் ஆண்டு முதற்கொண்டு எப்படியும் திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்று பல வகைகளில் முயற்சிகளை செய்து வந்த இவருக்கு இயக்குனர் கைலாசம் மற்றும் கே பாலச்சந்தரின் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: நீ அந்த பேட்டி குடுத்திருக்க கூடாது.. என்ன மன்னிச்சுடு மா.. Actress Aishwaryaa ஓப்பன் டாக்..

அந்த வகையில் இவர் 1977 ஆம் ஆண்டு முதன் முறையாக வசனம் பேசக்கூடிய கேரக்டர் ஒன்றில் செவப்பு வில்லு எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து 1982 க்கு பிறகு வெளி வந்த திரைப்படங்களில் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும் படி இருந்தது.

அந்த வகையில் இவர் அபூர்வ சகோதரர்கள், மீண்டும் கோகிலா, சிந்து பைரவி, ராஜாதி ராஜா, அக்னி நட்சத்திரம், புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களில் இவரது காமெடியை ரசிகர்கள் விரும்பி பார்த்ததோடு இவரை உச்சத்தில் உட்கார வைத்தார்கள்.

ஜனகராஜ் பேசிய வசனமான எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற வசனம் இன்று வரை ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்க கூடிய வகையில் அந்த சீனில் சிறப்பாக தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி இருப்பார்.

40 தடவை அலைய விட்டாங்க..

இதனை அடுத்து 90-களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் கிங், ஆயுத எழுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற திரைப்படங்களில் தன்னுடைய அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரை பாடாய்படுத்தியவர்கள் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். மேலும் இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது முழுமையாக சம்பளத்தை வாங்க மாட்டார்.

டப்பிங் முடிந்த பிறகு தான் உரிய தொகையை வாங்குவதாக அந்த பேட்டியில் தெரிவித்த இவர் ஒருவர் இவரை 40 தடவை சம்பள பாக்கியை பெறுவதற்காக அலைய விட்டதாக கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனகராஜ் வேதனை தகவல்..

மேலும் பல முறை அவரிடம் அலைந்தும் பணத்தை சரியாக வாங்க முடியவில்லை என்ற உண்மை சம்பவம் தற்போது இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

டப்பிங் முடித்த பிறகு தான் முழு பணத்தையும் பெறுவேன் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இவரது வெள்ளந்தித்தனத்தை மதிக்காமல் இவரை பணத்திற்காக அலைய விட்டதை குறித்து பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: நண்பர்களே என்னிடம் படுக்கையில் அதை செய்யும் படி கேட்டார்கள்.. ரகசியம் உடைத்த நடிகை கிரண்..

எனினும் இவரைப் போல் திறமையால் முன்னுக்கு வந்தவருக்கே இவ்வளவு கஷ்டங்கள் நடந்துள்ளதா? என பட்டிமன்றம் போட்டு பேசி இருக்கிறார்கள். இன்னும் திரையுலகில் இது போன்ற கூத்துக்கள் நடப்பது சகஜமான ஒன்றுதான்.

எனினும் மனிதத் தன்மை இல்லாமல் இது போன்ற விஷயங்கள் தொடர் கதையாக மாறாமல் இருக்க முற்றுப்புள்ளி வைப்பது அவசியமானதாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version