இவங்க தான் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பார்கள்.. நடிகை ஜானகி தேவி கூறிய திடுக் தகவல்..!

பிரபல நடிகை ஜானகி தேவி தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிலிருந்து தான் போய் இருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆடுகளம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் மதுரையை மையமாகக் கொண்ட வெளியாகும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

பேட்டி ஒன்றில் பேசிய இவர் நான் சினிமாவுக்கு செல்ல முடிவு செய்த போது என்னுடைய குடும்பத்தில் யாரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

என் அப்பா வேண்டவே வேண்டாம் என்று கூறினார். அப்போது நான் நீங்கள் அனுப்பவில்லை என்றால் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி விடுவேன் என்று மிரட்டி சினிமாவில் நடிக்க வந்தேன்.

அதற்கு பயந்து என்னுடைய அப்பா சினிமாவில் நடிக்க அனுமதித்தார். ஆனால் படப்பிடிப்பு தளங்களுக்கு அவரும் கூடவே வந்தார். அப்படித்தான் என்னுடைய சினிமா பயணம் தொடங்கியது.

சினிமாவில் நடிக்க ஆசை ஆசையாக வந்தேன். நான் முதலில் கமிட்டானது ஆடுகளம் திரைப்படம் தான் சினிமாவில் சின்ன கேரக்டர் கிடைப்பது மிகப்பெரிய விஷயம்.

ஆனால் எனக்கு ஈசியாக கிடைத்தது. காரணம் அந்த நேரத்தில் மதுரையை மையமாக வைத்து வந்த படங்களுக்கு நிறைய வாய்ப்பு இருந்தது.

அந்த நேரத்தில் என்னுடைய மதுரை ஸ்லாங் வாய்வு பெற்று கொடுத்தது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அது குறித்து என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்கள் யார் என்று பார்த்தால் சிறு சிறு நிறுவனங்கள் தான்.

பெரிய பெரிய நிறுவனங்கள் படத்தயாரிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் சினிமாவில் அறிமுகமாகும் நிறுவனங்கள் அல்லது சிறு நிறுவனங்கள் அடையாளமே தெரியாத தயாரிப்பு நிறுவனங்கள் இவர்கள் தயாரிக்கும் படங்களில் ஒப்பந்தமாகும் போது தான் இப்படியான பிரச்சனைகள் எல்லாம் வரும்.

ஒரு விஷயம் சொல்கிறேன். அவருடைய பெயரை நான் குறிப்பிடவில்லை. இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஒருவர். என்னை அவருக்கு நன்றாக தெரியும். நானும் அவரை நன்கு அறிவேன்.

என்னுடன் இன்ஸ்டாகிராமில் பேச ஆரம்பித்தார் ஆரம்பித்த சில நாட்களில் எவ்வளவு மோசமான அழைப்புகளை விடுத்தார். இவரா இப்படி…? என்று யோசிக்கும் அளவுக்கு மோசமாக பேசினார். இப்படியான கொடுமைகள் எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறேன் என வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை ஜானகி தேவி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam