“இப்படித்தான் உடல் எடை குறைச்சேன்..இது மட்டும் போதும்..” சீரியல் நடிகை ஜனனி அஷோக்…

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கும் பெரிய திரையில் நடிக்கும் நடிகையும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த வரிசையில் சீரியல் நடிகை ஜனனி அசோக் தன் உடல் எடையை குறைந்த நிலையில் தற்போது காட்சியளிக்கிறார்.

இப்படி ஸ்லிம்மாக ஃபிட்டாக மாறியதனின் பிட்னஸ் ரகசியம் என்ன என்று பலரும் கேட்டிருந்ததை அடுத்து அதற்கான ரகசியத்தை அவர் தெளிவாக வெளியிட்டு இருக்கிறார். அது பற்றிய பதிவினை இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரியல் நடிகை ஜனனி அசோக்..

சின்னத்திரை சீரியல் அழகி ஜனனி அசோக்கை நீங்கள் மௌன ராகம், செம்பருத்தி போன்ற சீரியலில் பார்த்து ரசித்திருக்கலாம். பார்க்கும் போதே மனதை அள்ள கூடிய வகையில் மிகச்சிறந்த அழகியாக விளங்குகிறார்.

மேலும் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் வெள்ளித் துறையிலும் கவனத்தை செலுத்தியதை அடுத்து முதல் முதலில் நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இந்த முதல் படத்தில் நடிக்க கூடிய அளவுக்கு பெரிதாக கேரக்டர் ரோல் அமையாமல் இருந்தாலும் நயன்தாராவுடன் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் வெள்ளி திரையில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சிறு, சிறு கதாபாத்திரங்கள் கிடைத்த நிலையில் சினிமாவை விட்டு சின்னத்திரைக்குத் மீண்டும் தாவினார்.

என்னோட டயட்..

இந்நிலையில் நடிகை ஜனனி அசோக் பார்ப்பதற்கு சற்று பூசியது போல் குண்டாக காட்சி அளித்த நிலையில் தற்போது படு ஸ்லிம்மாக பிட்டாக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவரது மேனி அழகை பார்த்து பிட்னஸ் ரகசியம் என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

கேள்விக்கு பதில் அளித்த இவர் தற்போது அதிக அளவு பழங்களை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வதால் தான் உடல் எடை குறைந்துள்ளது என்ற ரகசியத்தை கூறியதோடு மட்டுமல்லாமல், அதிக அளவு அசைவ உணவுகளையும் தவிர்த்து விட்டதாக கூறியிருக்கிறார்.

மேலும் வரும் காலங்களில் முற்றிலுமாக அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பதாக கூறி இருக்கும் இவர் சாப்பாடே தேவையில்லை. வெறும் பழங்கள் மட்டும் இருந்தால் போதும். நான் மகிழ்ச்சியோடு அதை உண்ட வண்ணம் இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால தான் உடம்பு குறைஞ்சது..

இப்படித்தான் தனது டயட்டில் அதிக அளவு பழங்களை எடுத்து வரும் இவர் உடல் எடை குறைந்து இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், மாமிச உணவுகளை தவிர்த்து இருக்கும் விஷயத்தால் தான் சீக்கிரம் வெயிட் லாஸ் ஆகியுள்ளது என்று சொன்னது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர் கூறி இருக்கும் அந்த உணவுப் பழக்கத்தை ஃபாலோ செய்யும் போது கட்டாயம் மாற்றம் அவர்களுக்கும் ஏற்படும்.

முடிந்தால் நீங்களும் இந்த டயட்டை ஃபாலோ செய்து உங்கள் உடலையும் குறைத்து ஆரோக்கியத்தோடு இருக்க முயற்சி செய்து பாருங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version