“ப்பா.. அப்டியே அள்ளி கொஞ்சலாம் போல இருக்கே..” – ஆளை மயக்கும் பிக்பாஸ் ஜனனி..!

பிக்பாஸ் ஜனனி ( BiggBoss Janany ) என அழைக்கப்படும் இவரது முழுப்பெயர் ஜனனி குணசீலன். இலங்கையை சேர்ந்தவர் டிவி தொகுப்பாளர், வீடியோ ஜாக்கி. மாடலிங் துறையில் இருப்பவர்.கடந்த விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல், போட்டியாளராக பங்கேற்றார். இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த 23 வயது பெண்ணாக, இவரை பார்த்தவுடனே, பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இலங்கை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் உணவு மற்றும் சுகாதார நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர், ஐபிசி தமிழ் யயூடியூப் சேனில் மாலை 5 மணி செய்திகதளை தொகுத்து வழங்குவது, ஜனனியின் பணியாக இருந்திருக்கிறது.

BiggBoss Janany

ஜனனி, கேபிடல் டிவி ஸ்ரீலங்காவில் விஜே ஆக இருக்கிறார். இவர் தொகுப்பாளினி லக்சனாவுடன் இணைந்து நடத்திய ‘துக் டிக் டோக்’ நகைச்சுவை நிகழ்ச்சி மேலும் ஜனனியை பிரபலமாக்கியது.

கடந்த 2022ல் ஆடை மற்றும் ஆடை பிராண்ட் கிராபோ 365 க்கு மாடலிங் செய்தார். ஸ்வர்ணாலயா ஜூவல்லரிக்கு விளம்பர மாடலாகவும் ஜனனி நடித்திருக்கிறார்.சமூக ஊடகத் தளமான ‘டிக்டாக்’ இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு, பிரபலமான டிக் டாக்கராக இருந்தவர் ஜனனி, இவருக்கு 1.70 லட்சம் பாலோயர்ஸ் இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.ஜனனி, ஒரு அசைவ உணவு பிரியராக உள்ளார்.

BiggBoss Janany

டிவி ஊடகங்கள் தந்த வெளிச்சமும், டிக்டாக் வாயிலாக கிடைத்த புகழும், இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஆண்டுதோறும் இலங்கையை சேர்ந்த ஒருவர் கட்டாயம், பிக்பாஸில் இடம்பிடிப்பர். அந்த வகையில், லாஸ்லியா மறக்க முடியாதவராக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடித்தும் வருகிறார்அதேபோல், சினிமா ஆசை கொண்ட ஜனனியும், கல்லூரியில் படித்த பிறகு சினிமா வாய்ப்புக்காக முயற்சித்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிர்ஷ்டம் அமைந்தது.

BiggBoss Janany

ஜனனி, கொஞ்சுகிற மொழியில் பேசும் இலங்கை தமிழுக்காக பலரும், அவரை விரும்பி ரசித்தனர். தவிர, சின்னப் பெண் தோற்றத்தில் அவரது கலகலப்பான, துறுதுறுப்பான நடவடிக்கைகளும் பிக்பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால், சில நாட்களுக்கு பிறகு, அவர் அமுதவாணன் மீது காட்டிய அதீத கவனமும், ஈர்ப்பும் அவர் மீதான எதிர்பார்ப்பை மாற்றி விட்டது. இதை பலரும் சுட்டிக்காட்டிய பிறகும், அவர் அமுதவாணன் ஆதரவாளராகவே செயல்பட்டு, தன்னைத்தானே டேமேஜ் செய்துகொண்டார்.

BiggBoss Janany

சில நேரங்களில், தன்னை மறந்து வீறிட்டு, கூச்சலிட்டு மற்றவர்களை போலவே நானும் நடந்துகொள்வேன் என, தன் மீது பார்வையாளர்களுக்கு இருந்த அபிமானத்தை குறைத்துக்கொண்டார்.

எனினும், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜனனி குணசீலன், அசத்தலான புடவை அணிந்த, தனது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து, லைக்குகளை அள்ளி வருகிறார்.மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு, தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …