சென்னை மும்பை என எல்லா இடங்களிலும் பெண்களிடம் கொடூரம்.. சிறைக்கு செல்லும் ஜானி மாஸ்டர்..!

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களில் பிரபலமான நடன இயக்குனராக அறியப்படுபவர் ஜானி மாஸ்டர்.

இவருடைய உண்மையான பெயர் ஷேக் ஜானி பாஷா ஆகும். இவர் பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கும் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கும் நடன இயக்குனராக பணியாற்றினார்.

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடன இயக்குனராக பிரபலமானார் ஜானி மாஸ்டர்.

இந்நிலையில் இவருடன் பணியாற்றிய ஒருவர் தற்போது தனியாக நடன இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த அவர் ஜானி மாஸ்டரின் பாலியல் கொடுமைகளை ஆதாரத்துடன் புகாராக கொடுத்திருக்கிறார்.

இதனை விசாரித்த காவல்துறை ஜானி மாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே வேறு ஒரு பாலியல் புகாரின் பேரில் ஆறு மாதம் சிறையில் இருந்தவர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இப்படியான பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam