ஜஸ்பிரித் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விளையாட வாய்ப்பு இருக்க..?இல்லையா.?

இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்பிரித் பும்ரா முதுகு அழுத்த காயம் காரணமாக கடந்த 5 மாதங்களாக அணியில் இருந்து விலகி இருந்தார். அவர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ​​பும்ராவின் பெயர் இல்லை.

கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ​​அங்கும் அவரது பெயர் இடம்பெறவில்லை. எனவே ஐபிஎல் போட்டியிலாவது விளையாடுவது பற்றி அனைவரும் ஊகித்து வந்தனர். ஆனால் அவர் ஐபிஎல் போட்டியிலும் விளையாட மாட்டர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றம்:

ஐபிஎல் 2023ல் இருந்து ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 6 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பையில் கூட, அவர் விளையாடுவது தொடர்பான விஷயம் சிக்கலாகத் தெரிகிறது. உலகக் கோப்பைக்கு கூட அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை என்றால், இந்திய அணிக்கு மிக பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் அவர் இந்திய அணியின் பந்துவீச்சின் மையமாக இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விளையாட வாய்ப்பு:

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆடிய ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரிக் பும்ரா விளையாட முடியவில்லை. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பும்ரா தகுதி பெற்றால் வலுவான இந்திய அணி உருவகா வாய்ப்பு உள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா மூன்று வடிவங்களிலும் விளையாடிய அனுபவம் அவருக்கு அதிகம் இருக்கிறது. அவர் யார்க்கர் நிபுணர் என்று கருதப்படுகிறார். காயம் காரணமாக, இந்திய அணியில் இடம் பெறாததால் பந்துவீச்சு சற்று பலவீனமாக இருப்பதாக தெரிகிறது.

இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் 58 இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி பும்ரா 72 டெஸ்ட் போட்டிகளில் 72 இன்னிங்ஸ்களில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 60 சர்வதேச டி20 போட்டிகளில் 59 இன்னிங்ஸ்களில் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ஐபிஎல்லில் 120 போட்டிகளில் 120 இன்னிங்ஸ்களில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …