“ரவா கிச்சடிக்கு பதில் இனி ஜவ்வரிசி கிச்சடி..!” – இப்படி செய்யுங்க..!

வீட்டில் மாவில்லாத சமயங்களில் கிச்சடியை மிக எளிதாக செய்து விடுவார்கள். அதிலும் வெள்ள ரவையை போட்டு கிச்சடி செய்து அசத்தும் தாய்மார்கள் இனி அதற்கு பதிலாக ஜவ்வரிசி கிச்சடி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் திணற விடுங்கள்.

javvarisi kichadi

இந்த வித்தியாசமான ஜவ்வரிசி கிச்சடி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக செய்ய என்னென்ன வழிகள் உள்ளது. அதை எப்படி சுவையாக செய்து கொடுப்பது என்பது பற்றிய விளக்கமான கட்டுரையை இந்த சமையல் பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜவ்வரிசி கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்

1.ஜவ்வரிசி ஒரு கப்

2.வேர்க்கடலை இரண்டு டேபிள் ஸ்பூன்

3.வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்று

4.எண்ணெய் மூன்று டீஸ்பூன்

5.சீரகம் அரை டீஸ்பூன்

6.கருவேப்பிலை சிறிதளவு

7.தேவையான அளவு உப்பு

8.எலுமிச்சை சாறு

9.நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்

10.கொத்தமல்லி சிறிதளவு

javvarisi kichadi

செய்முறை

முதலில் ஜவ்வரிசி ஒரு கப் எடுத்துக்கொண்டு அதை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அது ஊர தேவையான அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள்.

இந்த ஜவ்வரிசியானது குறைந்தபட்சம் 5 லிருந்து 7 மணி நேரமாவது ஊற வேண்டும். எனவே அது ஊர தேவையான தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு ஊறிய பிறகு அந்த தண்ணீரை வடித்து வெளியேற்றி விடவும்.

மேலும் நீங்கள் வைத்திருக்கும் வேர்க்கடலையை வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை நீங்கள் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியோடு சேர்த்து போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து விடுங்கள்.

javvarisi kichadi

இதனை அடுத்து ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பிறகு இஞ்சி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் இவற்றை போட்டு தாளிக்க வேண்டும். இது வெடித்தவுடன் நீங்கள் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதனோடு கலந்து நன்கு கிளறி விடவும் விடவும்.

பிறகு நீங்கள் தீயை அதிகரித்து வைத்து ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசி கலவையை போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் தொடர்ந்து கிளற வேண்டும். ஜவ்வரிசி அதிக நேரம் சமைத்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் சமயத்தை முடித்து விட வேண்டும்.

இப்போது ஜவ்வரிசி வெந்திருக்கும், வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இதில் நீங்கள் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …