உன் அம்மா அப்படி இருந்திருப்பார்.. என்னால் இருக்க முடியாது.. ஐஸ்வர்யா ராய் மாமியார் தடாலடி..!

வீட்டுக்கு வீடு வாசப்படி.. யார் வீட்டில் தான் மாமியார் மருமகள் பிரச்சனை இல்லை என்று பேசக்கூடிய வகையில் தற்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமியார் ஜெயா பச்சன் குறித்து பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் நாளொரு மேனியாய் வெளி வந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணையங்களில் தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளி வந்து பலரையும் பல்வேறு வகைகளில் யோசிக்க வைத்துள்ளது.

உன் அம்மா அப்படி இருந்திருப்பார்..

உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை பொறுத்த வரை இந்திய அளவில் பேமஸான இவர் இந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக அளவு சம்பளம் பெறும் நடிகையாகவும் விளங்குகிறார். இவர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்ற வேளையில் இவர்கள் இருவரும் பிரிந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக செய்திகள் கசிந்ததை அடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய விதத்தில் அபிஷேக் பச்சன் விளக்கம் ஒன்றினை தந்து இருந்தார்.

அவர் ஐஸ்வர்யா ராயோடு இணைந்து வாழ்வதாகவும் அவர்களுடைய திருமண மோதிரத்தை காட்டி இன்றும் நாங்கள் தம்பதிகளாக தான் இருக்கிறோம். இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னதோடு அப்படி ஏதாவது சொன்னால் அது வேறு விதமாக வரும் என்ற கருத்தையும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் பெரிய வீட்டில் பிரச்சனை ஏதும் இல்லை என்று சொல்ல முடியாத அளவு தற்போது ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன் வீடியோ ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

என்னால் இருக்க முடியாது..

இந்த வீடியோவில் இவர் பேசிய விஷயம் தான் தற்போது காட்டு தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அட.. இப்படியா.. ஜெயா பச்சன் சொன்னார் என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குக் காரணம் ஜெயா பச்சனிடம் நீங்கள் ரொம்ப ஸ்டிக்ட்டான அம்மாவாக இருக்கிறீர்களா? அல்லது மிகவும் ஸ்டிக்ட்டான மாமியாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தான் அதிர்ச்சியின் உச்சத்திற்கு காரணம்.

இவர் இந்த கேள்விக்கு பதில் என்ன சொன்னார் தெரியுமா? மகளுக்கும் மருமகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்தது என்று சொன்னதோடு நிற்காமல் பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுக்கணும் என்று மகள் எப்போதும் நினைக்க மாட்டாள்.

ஐஸ்வர்யா ராய் மாமியார் தடாலடி..

ஆனால் மருமகளின் நிலை வேறு. மாமனார் மாமியார் விஷயத்தில் அவளால் அப்படி சொல்ல முடியாது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா. ஆனால் ஐஸ்வர்யா ராய் என் மகள் அல்ல மருமகள் என்று பொடி வைத்து சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து தான் ஐஸ்வர்யா ராயிடம் ஸ்டிக்க்ட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் அம்மா அப்படி இருந்திருப்பார் என்று நினைக்கிறேன் என்று ஜெயா பச்சன் ஓபன் ஆக பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் மாமியார், மருமகள் குறித்த விவாதங்கள் அதிகளவு சென்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை ஐஸ்வர்யா ராய் பற்றி சொல்லி வருவதோடு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இரு நடிகர்களோடு தொடர்பில் இருந்த இவரைத்தான் அபிஷேக் பச்சன் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயத்தையும் சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version