ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? வாயடைத்து போன ரசிகர்கள்…! Jayam Ravi விவாகரத்து…!

நடிகர் Jayam Ravi தனது மனைவியை ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்திருக்கிறார். தற்போது ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி.

இந்த திரைப்படத்தின் வெற்றி இவருக்கு ஜெயம் ரவி என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது இவரின் பெயர் ரவி என்பதிலிருந்து ஜெயம் ரவியாக மாற்றப்பட்டது.

முதல் படம் முதல் படம் சூப்பர் ஹிட் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர அமைத்தது. அதன்படி எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷப்பிரமணியம் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுக்க ஜெயம் ரவி தனி காட்டு ராஜாவாக தமிழ் சினிமாவில் வளம் வரம் தொடங்கினார்.

வருடத்திற்கு இரண்டு படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அடையாறு பார்க் ஷெரட்டன் மிகவும் பிரம்மாண்டமாக அவர்களுடைய திருமணம் நடைபெற்று முடிந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன் சூர்யா என தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் உங்கள் அனைவரும் ஜெயம் ரவியின் திருமண விழா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனை ஜெயம் ரவி அல்லது ஆர்த்தியோ மறுக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய விவாகரத்தை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

இவருடைய அறிக்கை தான் தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் மட்டும் 135 கோடி ரூபாய் கொடுக்க இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி என்ற தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து கொண்டு இருக்கின்றன.

ஆர்த்தி குடும்பம் ஒரு சினிமா தயாரிப்பு குடும்பம். அவர்களிடம் இல்லாத பணமா..? ஜெயம் ரவியிடம் இருந்து 135 கோடி பணம் பெற வேண்டுமா..? என்றெல்லாம் இணைய பக்கங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

அதே சமயம் இருவரின் தனிப்பட்ட முடிவு.. தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு.. இதில் பொது கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை.. மேலும், 135 கோடி விவகாரம் உண்மையா..? இல்லையா..? என்று கூட தெரியாத நிலையில் இது குறித்து விவாதிக்க அவசியம் இல்லை என்ற குரல்களையும் பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version