தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையும் பிரபலமான அரசியல்வாதியுமாக சிறந்த தலைவியாக திகழ்ந்து கொண்டிருந்தவர் ஜெ.ஜெயலலிதா.
இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றிருந்தார்.
நட்சத்திர நடிகை ஜெ. ஜெயலலிதா:
புரட்சித்தலைவி அம்மா என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதா சர்ச் பார்க் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.
கல்லூரி படிப்பின் இடைவெளியில் கிடைத்த நேரத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து வந்தார் .
முதன் முதலில் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் ஜெயலலிதா .
அதுதான் அவரது முதல் படமும் கூட மிகவும் இளம் வயதிலேயே நடிக்க வந்த ஜெயலலிதா தொடர்ச்சியாக சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ,ரவிச்சந்திரன், சிவக்குமார், என்.டி ராமா ராவ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை படித்தார்.
திரைப்படத்தில் கிடைத்த புகழ்:
இவர் குறிப்பாக எம்ஜிஆர் உடன் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பாராட்டப்பட்ட நடிகையாக இருந்தார்.
தன் நடிப்பின் மூலம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த ஜெயலலிதா அதன் மூலம் அரசியலில் அடி எடுத்து வைத்து முதலமைச்சராக இரும்பு பெண்மணியாக வலம் வந்து கொண்டு இருந்தார்.
இதனிடையே அவர் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை சௌகார் ஜானகி பேட்டி:
இந்நிலையில் நடிகை ஜெயலலிதா குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத ரகசிய விஷயம் ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரபல நடிகை ஒருவரிடம் கிட்டத்தட்ட 40 வருடமாக பேசாமல் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழ் சினிமாவின் வயதான பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி தான் அவர்.
சௌகார் ஜானகி நடிகைகளை போல் தன் தலைமுடிக்கு டை அடிக்காமல் வெள்ளை நிற முடியிலேயே இயற்கையாக வலம் வந்தார்.
அது மட்டும் இல்லாமல் சரளமாக ஆங்கிலம் பேசி அசத்தும் நடிகையாகவும் அந்த காலத்திலேயே பார்க்கப்பட்டார் சௌகார் ஜானகி.
40 வருட பகை தீர்ந்தது:
அவர் ஒரு நேர்காணல் பேசும்போத. சின்ன வயதில் எனக்கும் ஜெயலலிதாவும் இடையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நாங்கள் நேரில் பார்த்துக் கொள்வதில்லை பேசிக் கொள்வதில்லை. ஒருமுறை ஜெயா தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டேன்.
அப்போது என்னிடம் ஜெயலலிதா பற்றி கேட்டார்கள். என்னுடைய வாழ்நாளில் ஜெயலலிதாவை இந்தியப் பிரதமர் ஆகவும், இந்திய ஜனாதிபதியும் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய ஆடை என கூறினேன்.
ஆனால், அப்போது ஆட்சியில் DMK தான் இருந்தது. அந்த நேர்காணலை பார்த்த ஜெயலலிதா உடனே வீட்டிற்கு வந்து லெட்டர் ஹெட்டில் அவங்க கைப்பட ஒரு லெட்டர் எழுதி எனக்கு அனுப்பினார்கள்.
அந்த லெட்டரை நான் இன்னும் லேமினேட் செய்து ஞாபகார்த்தமாக வைத்திருந்தேன் என்று உணர்ச்சியுடன் பேசினால் சௌகார் ஜானகி.
அப்படித்தான் 40 வருட பகை முடிவுக்கு வந்து இருவரும் சமாதானமானோம் என அவர் கூறியுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.