ரஜினிக்கு ஜோடியாக மறுத்த ஜெயலலிதா..! தாறுமாறு ஹிட் அடித்த படம்..! எது தெரியுமா..?

73 வயதை கடந்து விட்ட நிலையிலும் அன்று முதல் இன்று வரை திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து என்றென்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டது.

ரஜினிக்கு ஜோடியாக மறுத்த ஜெயலலிதா..

நடிகர் ரஜினிகாந்த் என்றும் படு பிஸியாக திரைப்படங்களில் நடித்த வண்ணம் இருக்கிறார். தற்போது வேட்டையன் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

தமிழ் திரையுலகில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த இவர் அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரி தந்தது.

இதனை அடுத்து சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் ஸ்டெயிலில் மயங்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவு தனது ஸ்டைலின் மூலம் பலரையும் கவர்ந்த இவர் கருப்பு எம்ஜிஆர் என்று கூட அழைக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் மாஸ் படத்தில் ஒன்றான பில்லா படம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி கொடுத்து ரஜினிக்கு மிகச் சிறப்பான பெயரை பெற்று தந்தது.

தாறுமாறு ஹிட் அடித்த படம்..

இந்தப் படம் குறித்து அண்மையில் ஒரு தகவல் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலில் இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஜெயலலிதாவை தான் அணுகி இருக்கிறார்கள்.

ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த காரணத்தால் தனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார்.அத்தோடு போதுமான அளவு பணம் இருப்பதால் நிம்மதியாக ராணி போல வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

மேலும் அரசியலில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வந்த வேளையில் இந்த படத்தை வேண்டாம் என்று அவர் சொன்னதை அடுத்து ஸ்ரீபிரியாவிற்கு அந்த ரோலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற விஷயத்தை நமது முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எது தெரியுமா..

மேலும் ஜெயலலிதா தான் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க திணறுவதாக வெளி வந்த பத்திரிக்கை செய்திகளுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் ரஜினியோடு பில்லா படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தும் தான் அதை மறுத்ததை தெளிவு பட கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீபிரியாவிற்கு அந்த கேரக்டர் ரோல் கிடைப்பதற்கு ஜெயலலிதா வேண்டாம் என்று சொன்னது தான் காரணமா? என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்

மேலும் ஸ்ரீபிரியா நடித்த அந்த ரோலில் ஜெயலலிதா நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை தங்களது கற்பனை குதிரைகளை தட்டி விட்டு கற்பனை செய்து பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version