நிலைமை கைமீறி போயிடுச்சா..? ஜெயம் ரவி மனைவி முடிவை பார்த்து கேள்வி எழுப்பும் இணையக்குடிகள்..!

தமிழில் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அதிகபட்சம் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்களில் ஜாலியான ஒரு கதாபாத்திரமாகதான் ஜெயம் ரவி இருப்பார். இந்த நிலையில் ஆரம்பத்தில் கதைகள் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருந்த ஜெயம் ரவி தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வந்தன.

 தில்லாலங்கடி, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தன. தொடர்ந்து அவை ஜெயம் ரவிக்கு பெரிய வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தன.

தேர்ந்தெடுக்கும் கதைகள்

ஆனால் சமீப காலமாக ஜெயம் ரவி தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதை காட்டிலும் தோல்வியையே அதிகம் கண்டு வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த இறைவன், அகிலன், சைரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே பெரும் தோல்வியை கண்டன.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவரின் மார்க்கெட் படுத்து விடும் என்ற நிலைமை இருக்கிறது. இதற்கு நடுவே அவர் நடித்து நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் மட்டும் தான் நல்ல வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.

விவாகரத்து பிரச்சனை:

இதற்கு நடுவே ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து ஆகப் போவதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் பரவி வருகின்றன. அவர்கள் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அது அவர்களை விவாகரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இன்னும் சிலர் ஜெயம் ரவி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இதற்கு நடுவே ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி.

அந்த பதிவில் மூலம் இவர்கள் இருவரும் இன்னும் பிரியவில்லை ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர் ஆனால் அதற்குப் பிறகு தற்சமயம் இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியின் புகைப்படத்தை நீக்கி இருக்கிறார் ஆர்த்தி.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே உண்மையிலேயே மனக்கசப்பு இருந்து வருகிறது என்று ரசிகர்கள் பேச துவங்கி இருக்கின்றனர் ஆனால் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இது குறித்து செய்தி வெளியிடாத வரை இந்த பிரச்சனை பேசு பொருளாக தான் இருந்து வரும் என்று தெரிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version