“போதும்டா சாமி முடியல.. விடாப்பிடி மாமியார்.. விரட்டி விரட்டி காதலித்த ஆர்த்தி..” விவாகரத்து காரணம் இது தானாம்..!

கடந்த சில மாதங்களாக நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்திகள் கிசுகிசுவாக வெளியாகி வந்த நிலையில் தற்போது அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி.

தன்னுடைய மனைவி உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

பொதுவாக விவாகரத்து செய்திகள் வரும்போதெல்லாம் அது கிசுகிசுவாக தான் இருக்கும் என நம்பிக்கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், தற்போது இந்த விஷயம் உண்மையாகி இருக்கிறது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் ஜெயம் ரவி அண்மையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் இரண்டு பாவங்களும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக பல்வேறு கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் நல்ல முறையில் வசூல் செய்தன.

இந்நிலையில் தற்போது இவருடைய விவாகரத்து செய்தி இணைய பக்கங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஆர்த்தி ஜெயம்ரவி விவாகாரம் புகைந்து கொண்டிருக்கும் போதே பாடகி சுசித்ரா தனது youtube சேனல் ஒன்றில் பேசியிருந்தார்.

அதில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது. அவர் மிகவும் ஆடம்பரமான பெண். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஜெயம் ரவி நைட் அன்ட் டே வேலை செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

அப்படியே வீட்டிற்கு சென்றாலும் ஆர்த்தி என்ன மண நிலையில் இருப்பார் என்று கணிக்கவே முடியாது. அவ்வளவு மோசமான ஒரு பெண் அவள்.

ஆர்த்தி அழகாக இருந்ததால் குழந்தைகள் இருந்ததால் இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வாழ்ந்து விட்டார்.

இத்தனை வருஷம் ஜெயம் ரவி ஆர்த்தி கூட வாழ்ந்தது பெரிசு. திருமணம் செய்து கொள்ள முயற்சித்த போது ஆர்த்தியின் அம்மாவும் ஜெயம் ரவியின் மாமியாருமான பல்வேறு தடைகளை போட்டார்.

ஆனால் ஜெயம் ரவியை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆர்த்தி. ஆனால் திருமணம் செய்த நாள் முதலே இருவருக்குள்ளும் ஒற்றுமை என்ற விஷயமே கிடையாது.

இத்தனை ஆண்டுகள் ஜெயம் ரவி அந்த ஆர்த்தியுடன் வாழ்ந்தது மிகப்பெரிய விஷயம் என பேசி இருந்தார். இந்நிலையில் தற்போது பாடகி சுசித்ரா சொன்னது போலவே நடந்திருக்கின்றது. இதனை அறிந்த ரசிகர்கள் போதும்டா சாமி முடியல என்று பெருமூச்சு விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version