கோவாவில் அந்த பிரபலத்துடன் உல்லாசம்.. வெளியான ஆதாரங்கள்.. வசமாக சிக்கிய ஜெயம் ரவி..!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவருக்கு இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. கடந்த 18 வருடங்களாக நல்லபடியாக வாழ்க்கையை நடத்தி வந்த ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் சமீபத்தில் விவாகரத்து செய்ய போவதாக பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் இந்த விஷயத்தில் ஆர்த்திக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்ததும் ஆர்த்திதான். ஆர்த்தி முதன்முதலாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு டெலிட் செய்திருந்தார்.

பிரபலத்துடன் உல்லாசம்

இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஜெயம் ரவியின் மாமியார்தான் இவர்களது சண்டைக்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் திட்டவட்டமாக எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஆர்த்தி என்னிடம் எந்த ஒரு தகவலுமே கொடுக்காமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

வெளியான ஆதாரங்கள்

இதனால் எனது குழந்தைகள் கஷ்டப்படுகின்றனர் என்று ஆர்த்தி கூறியிருந்தார். இதன் பின்புலம் என்னவென்று பார்க்கும் பொழுது இதற்கு பின்னால் ஒரு பாடகி பெயர் அடிபடுவது தெரிகிறது. கெனிஷா பிரான்சிஸ் என்கிற பாடகி ஒருவர் ஜெயம் ரவியுடன் வெகு நாட்களாகவே நட்பில் இருந்திருக்கிறார்.

இவர் தான் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. சில காலங்களாகவே ஜெயம் ரவி தமிழ்நாட்டில் அதிகமாக இல்லாமல் கோவாவிற்கு சென்று அங்கு தங்கி இருக்கிறார். அப்பொழுது அவர் இந்த பாடகியுடன்தான் தங்கி இருந்தார் என்று பேச்சுக்கள் அடிப்பட துவங்கின.

வசமாக சிக்கிய ஜெயம் ரவி

அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவியின் காஸ்ட்லி காரை ஓட்டிக் கொண்டு சென்ற போது அங்கு விதிமீறல் செய்த காரணத்தினால் கோவா போலீசார் அந்த பாடகிக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். இந்த ஒரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு தற்சமயம் சமூக வலைதளங்களில் பாடகி கெனிஷா பிரான்சிஸ்க்கும் ஜெயம் ரவிக்கும் இடையே இருந்த தொடர்பின் காரணமாகதான் ஆர்த்தி விரக்தி அடைந்து அந்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

ஏனெனில் இந்த சம்பவம் நிகழ்ந்தது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமண நாள் அன்று என்று கூறப்படுகிறது. திருமண நாளான்று கூட தன்னுடன் இல்லாமல் வேறு ஒரு பாடகியுடன் ஜெயம் ரவி இருந்தது அவரது மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version